’துப்பாக்கி’ பாணியில் ஸ்கெட்ச்.. டெல்லியோடு 4 நகரங்களை குறிவைத்த உமர்! 2 டன் வெடிமருந்துடன் கார்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி மாலை சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், என்ஐஏ, எஸ்பிஜி போன்ற அமைப்புகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்நிலையில் டெல்லி மட்டுமல்லாது மொத்தம் நான்கு பெரிய நகரங்களில் அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணியளவில், செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோவில்கள் அருகே மெதுவாக சென்ற கார் ஒன்று சிக்னலில் நின்றது. சில வினாடிகளில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

இந்த விபத்தில் கார் அருகே நின்றிருந்தவர்கள், நடைபாதையில் சென்றவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்
டெல்லி செங்கோட்டை தாக்குதல்
இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், டெல்லி போலீஸ், தேசிய புலனாய்வுத் துறை (NIA), தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஆகியவை இணைந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி மட்டுமல்லாது மொத்தம் நான்கு பெரிய நகரங்களில் அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் உமர் என்பதை விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
என்ஐஏ விசாரணை
மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய விசாரணையில், மொத்தம் 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த உமர் மற்றும் குழுவினர் திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 8 பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 4 நகரங்களைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத திட்டம்
இதற்காக மருத்துவர்கள் முசம்மில், அதீல், உமர் மற்றும் ஷாஹீன் ஆகியோர் ஒருங்கிணைந்து ரூ. 20 லட்சம் நிதித் திரட்டியதாகவும், செங்கோட்டை தாக்குதலுக்கு முன்னதாக திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த தொகையை உமரிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது. குருகிராம், நுஹ் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து 2,000 கிலோ என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்) வெடிப் பொருள்களை ரூ. 3 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி ஐஇடி வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர்.
மருத்துவர் உமர்
இரண்டு முதல் 4 பேர் கொண்ட சிக்னல் குழுவை உருவாக்கி, இந்த திட்டத்தை உமர் ஒருங்கிணைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரிவான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்தின் அமைப்புடன் மருத்துவர் முசம்மில்லுக்குத் தொடர்பு இருந்ததும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஹரியானாவில் உமர் வாங்கிய சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரைக் காவல்துறையினர் புதன்கிழமை இரவு கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளனர்.
2 கார்கள்
தற்போது, மேலும் இரண்டு கார்கள் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்த உமர் ஏற்பாடு செய்திருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இதனடிப்படையில், பல்வேறு கோணங்களில் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், பயங்கரவாதத் தாக்குதலுக்காக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் குழுவில் உள்ள அனைவரையும் கண்டுபிடிக்கும் பணியில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications