டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்! மாலை 6.52 முதல் தற்போது வரை நடந்தது என்ன? பரபர தகவல்கள்
டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், 13 பேர் உயிரிழந்ததுடன் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கார் சிக்னலில் நின்றது முதல் தற்போது வரை தேசிய அளவில் என்ன நடந்தது என்பதுகுறித்து சற்றி விரிவாகப் பார்க்கலாம்..
செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோவில்கள் அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெதுவாக சென்ற கார் ஒன்று சிக்னலில் நின்றது. சில வினாடிகளில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. பல வாகனங்களில் தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் கார் அருகே நின்றிருந்தவர்கள், நடைபாதையில் சென்றவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். டெல்லி போலீஸ், தேசிய புலனாய்வுத் துறை (NIA), தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஆகியவை இணைந்து சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.
டெல்லி குண்டுவெடிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடை நடத்தி வந்த ஒருவர் கூறுகையில்," "திடீரென பயங்கர சத்தம் கேட்டு சில கார்கள் தூக்கி வீசப்பட்டன. கடையில் இருந்த நான் வெடிப்பு அதிர்வால் கீழே விழுந்துவிட்டேன். பல கிலோமீட்டர் தூரத்திலும் சத்தம் கேட்டது," என தெரிவித்துள்ளார். அதேபோல், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே பேசுகையில்," "எங்கள் வீட்டிலேயே வெடிப்பின் அதிர்வு உணரப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது," என கூறினார்.
போலீசார் தீவிர விசாரணை
சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் கூறுகையில், "காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது சதிச் செயலா, அல்லது விபத்தா என்பதை உறுதி செய்ய தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த கார் டெல்லி பதிவு எண் கொண்டதாகவும், அதில் எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
உச்சபட்ச பாதுகாப்பு
இந்த கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு டெல்லி முழுவதும் உயர்மட்ட பாதுகாப்பு நிலை அறிவிக்கப்பட்டது. எல்லா முக்கிய சாலைகளும், மெட்ரோ நிலையங்களும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. சந்தேக நபர்களை அடையாளம் காண தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலைமை குறித்து விவரித்தார்.
அமித் ஷா
சம்பவம் தொடர்பாக பேசிய அமித் ஷா," "டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் பகுதியில் கார் வெடித்தது. இதில் நடைபாதையில் சென்றவர்களும் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறும்," என்று தெரிவித்தார்.
தலைவர்கள் இரங்கல்
"டெல்லி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்," என தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்," "டெல்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகின்றன," என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாதுகாப்பு
தீவிரவாத தாக்குதல் என்ற சந்தேகத்தால், நாடு முழுவதும் உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அண்டை மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், ஹரியானா மட்டுமல்லாது, மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து மாவட்ட எஸ்.பி., காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐ.ஜி.க்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவிட்டார்.
உஷார் நிலையில் தமிழகம்
இதையடுத்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் வாகன சோதனை, ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு முழுவதும் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்றன. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தீவிரவாத தாக்குதலா? அல்லது விபத்தா? என்பதை உறுதிப்படுத்த, தேசிய புலனாய்வுத் துறை முழுமையான விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications