ஷாக்கிங்.. டெல்லியில் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. 7 பேர் உயிரிழப்பு..!
டெல்லிலியில் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு
டெல்லி: டெல்லியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியுள்ளது.. இந்த தகவலை டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், சில வாரங்களாக அதிகரித்துவருகிறது.
அக்டோபர் மாதத்துக்கு பிறகு, தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.. வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் மேலும் அதிகரித்து வருகிறது.

வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மறுபடியும் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது... டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது...

சிகிச்சை
இரவுநேர ஊரடங்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.. எனினும், டெல்லியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. ஒரே நாளில் 20,181 பேருக்கு கொரோா உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.. கொரோனா பரவல் தொற்று விகிதமும் 19.60 சதவீதம் அதிகரித்ததால் டெல்லிவாசிகள் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

பொதுமுடக்கம்
இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,143 ஆக உயர்ந்துள்ளது.. இப்போது 48,178 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மறுபடியும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துவிட்டால், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என்று புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சத்திர்ல் உள்ள நிலையில், டெல்லி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 20 ஆயிரத்தை கடந்துள்ளது கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது...
Recommended Video

உயிரிழப்பு
எனினும், டெல்லியில் இதுவரை ஒமைக்ரான் தொடர்பான உயிரிழப்பு பதிவாகவில்லை... நேற்று உயிரிழந்த 9 பேரில் நிறைய பேருக்கு இணை நோய்கள் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமோ என்ற பீதியும் சூழ்ந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரவல் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு முழு வீச்சில் இறங்கி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications