டெல்லி வன்முறை.. 8 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் ஷாரூக் கான் உ.பி.யில் கைது
டெல்லி: டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தின் போது போலீஸை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜாபர்தபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டம் தொடங்கியது.

இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி ஜாப்ராபாத், மவ்ஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கலவரத்தில் 47 பேர் பலியாகிவிட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
டெல்லி வன்முறை சம்பவத்தின் போது இளைஞர் ஒருவர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அவர் ஷாரூக்கான் என்பதும் அவருக்கு 23 வயதாகிறது என்பது தெரியவந்தது.
ஷாரூக் கான் வன்முறை சம்பவத்தின் போது ஜாப்ராபாத்தில் துப்பாக்கியால் 8 ரவுண்டு சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்து விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications