கொளுத்தும் வெயில்.. ஜூலை 8-ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. டெல்லி அரசு உத்தரவு
டெல்லி: தலைநகரான டெல்லியில் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால், 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை இன்னும் பெரிதாக துவங்காத காரணத்தால் வட இந்திய மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகரான டெல்லியில் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் இப்போதும் கொளுத்தி வருகிறது. வரும் வாரங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வெயிலின் தாக்கத்தை அடுத்து 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக ஜூலை 8-ம் தேதி வரை, 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிஷ்சோடியா கூறுகையில், "டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் ஜூலை 8-ஆம் நாள் வரை நீட்டித்துள்ளோம் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படி குறிக்கப்பட்ட நாளில் வகுப்புகள் தொடங்கும். இந்த விடுப்பு அறிவிப்பு தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருதரப்புக்கும் பொருந்தும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications