எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானாவில் திடீர் என்று சில நிமிடங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து அடிக்கடி டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 16 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியை போலவே அருகில் ஹரியானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது .

எத்தனை முறை

எத்தனை முறை

மே மாதம் மட்டும் டெல்லியில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் ஜூன் மாதமும் 14 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி டெல்லியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் எல்லாம் சின்ன சின்ன நிலநடுக்கங்கள் ஆகும். அதிகபட்சம் 4.8 ரிக்டர் அளவு வரை பதிவாகி உள்ளது. 3.5 முதல் 4.5 ரிக்டர் வரை சராசரியாக டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இன்று மீண்டும்

இன்று மீண்டும்

இந்த நிலையில் இன்று மீண்டும் டெல்லி மற்றும் ஹரியானாவில் திடீர் என்று சில நிமிடங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. குர்கானில் இருந்து 63 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

குலுங்கியது

குலுங்கியது

இதனால டெல்லியில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் அலுவலகங்கள் மோசமாக குலுங்கியது. மக்கள் இதனால் கடும் அச்சத்திற்கு உள்ளார்கள். மக்கள் இதனால் பாதுகாப்பான இடத்திற்கு நோக்கி ஓடினார்கள். அடிக்கடி இப்படி நிலநடுக்கம் ஏற்படுவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக எச்சரிக்கை

முன்னதாக எச்சரிக்கை

முன்னதாக டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இப்படி சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதற்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.பொதுவாக ஒரு இடத்தில் பெரிய நிலநடுக்கம் வரும் என்றால் அதற்கு முன் சிறிய நிலநடுக்கம் பல வர வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நடக்கிறது என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+