Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி பல்கலையில் கேரள மாணவனை டார்ச்சர் செய்யும் ஏபிவிபி மாணவர்கள்... வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி பல்கலையில் கேரள மாணவனை டார்ச்சர் செய்யும் ஏபிவிபி மாணவர்கள்... வீடியோ

    டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் புதிய குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாயா அல்லது இல்லையா என்று கேட்டு கேரளா மாணவனை ஏபிவிபி மாணவர்கள் டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. குறிப்பாக கல்லூரிகளில் மாணவர்கள் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள். இப்படி நடக்கும் போராட்டங்களுக்கு எதிராக பாஜக ஆதரவு அணியான ஏபிவிபி மாணவர்கள் அணி எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறார்கள்.

     Delhi University: ABVP activists heckling a student from Kerala at Chhatra Marg over his position on CAA

    இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மாணவர்கள் அணியின் ஷாஹ்தாரா மாவட்ட கன்வீனர் ஜிஜேந்திர் சௌத்ரி மற்றும் இன்னொருவர் இணைந்து கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரை குடியரிமை சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பி டார்ச்சர் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோவில் ஏபிவிபி மாணவர் அணியின் ஜிஜேந்திர் சௌத்ரி கேரள மாணவரிடம் குடியுரிமை சட்டத்தை நீ ஆதரிக்கிறாயா இல்லையா? குடியுரிமை சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறாரா அல்லது இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு கேரள மாணவர் தான் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கவில்லை என்று கேரள மாணவர் சொல்கிறார். அதன்பிறகு அருகில் உள்ள மற்றொரு மாணவன் கேரள மாணவனை அங்கே கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்கிறார்.

    இன்னொரு 10 வினாடி வீடியோ கிளிப்பில் ஏபிவிபி மாணவர் அணியின் ஜிஜேந்திர் சௌத்ரி ஒரு மாணவரை அடித்து உதைப்பது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் தான் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கு முன்னதாக இடதுசாரியைச் சேர்ந்த சிலர் ஏபிவிபி பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+