சாரே ஜகான் சே அச்சா.. பாடத்திட்டத்தில் இருந்து கவிஞர் இக்பால் நீக்கப்பட்டார்.. டெல்லி பல்கலை அதிரடி
டெல்லி: பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் தேசிய கவிஞர் என புகழ்பெற்ற முகமது இக்பாலின் அத்தியாயத்தை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (இது தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) பிறந்த இக்பால், தற்போது பாகிஸ்தான் நாட்டின் தேசிய கவிஞராக அடையாளம் காணப்படுகிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அவர் இறந்து விட்டாலும், பாகிஸ்தான் அவரை தங்கள் நாட்டு கவிஞர் என்று கொண்டாடினாலும் கூட இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இவர் கொண்டாடப்பட்டுதான் வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் நமது தேசத்தின் முதல் பிரதமரான நேரு இவருடைய மிகப்பெரிய ரசிகர். இந்தியா சுதந்திரமடைந்தபோது நாடாளுமன்றத்தில் முதன் முதலாக பாடல் ஒன்று ஒலிக்கப்பட்டது. அதுதான் 'சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா'. இதை எழுதியவர் இக்பால்தான். அந்த அளவுக்கு நாடுகள் கடந்து, மதங்கள் கடந்து, இனங்கள் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட்ட கவிஞர்தான் இக்பால்.
இவர் குறித்த பாடத்தொகுதி டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த பாடத்தொகுதியை நீக்க பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் நேற்று (மே.26) தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. பிஏ பிரிவில் 6வது செமஸ்டரில் அரசியல் அறிவியல் பாடத்திட்டம் வருகிறது. இதில்தான் 'நவீன இந்திய அரசியல் சிந்தனை' என்கிற தலைப்பின் கீழ் இக்பால் குறித்த வாழ்க்கை குறிப்புகள், கவிதைகள், அவர் எழுதிய நூலிலிருந்து சில தொகுப்புகள் பாடங்களாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தொகுப்புகள்தான் தற்போது நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை கவுன்சில் உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இக்பால் மட்டுமல்லாது ராம்மோகன் ராய், பண்டிதா ரமாபாய், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோர் குறித்த சில தொகுப்புகளும் பாடத்திட்டமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இக்பால் குறித்த தொகுப்பை நீக்க கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இக்பால் ஒரு வெறித்தனமான இறையியல் அறிஞர். அவர் பாகிஸ்தானின் தத்துவத் தந்தை என்று சொல்லப்படுகிறார். அதேபோல ஜின்னாவை முஸ்லீம் லீக்கில் ஒரு தலைவராக நிலைநிறுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ஒன்றுபட்ட இந்தியாவின் பிரிவினைக்கு ஜின்னா எப்படி காரணமோ அதேபோல இக்பாலும் மற்றொரு காரணம்.
அந்த வகைகயில் முகமது இக்பாலின் அத்தியாயத்தை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளது. ஏபிவிபியும் கவுன்சிலின் தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது.
-
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications