சிவா - ஜூல்பிகர் - தியாகி.. இதை கவனித்தீர்களா? டெல்லி கலவரத்தை மொத்தமாக விளக்கும் ஒரு போட்டோ!
டெல்லி: டெல்லியில் இரண்டு நாட்களாக நடக்கும் கலவரத்தை ஒரே ஒரு புகைப்படம் மொத்தமாக விளக்கி உள்ளது.
டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த பெரும் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர்.

எப்படி கலவரம்
இந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் கடைகள் மட்டும் அதிகம் குறி வைத்து தாக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இருக்கும் வீடுகள், அவர்களின் பெயர்களில் இருக்கும் கடைகள் எல்லாம் குறி வைத்து தாக்கப்படுகிறது. இஸ்லாமிய பெயர்களை எங்கு பார்த்தாலும் அதை அடித்து உடைத்து இருக்கிறார்கள். சிறு சிறு இசுலாமிய வழிபாட்டு தலங்களை கூட விடாமல் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர்.

எப்படி வழிபாட்டு தலங்கள்
அதேபோல் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் பலவற்றில் இதேபோல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் பல நேற்று இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்தில் இன்னும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கை அதிகாரபூர்வமானது. இன்னும் பலர் கலவரம் நடந்த பகுதியில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
|
எப்படி கலவரம்
அதேபோல் பல இஸ்லாமியர்கள் இந்த கலவரத்தில் கொடுமைப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமியர் ஒருவர் நேற்று கும்பிட்டு நிற்கும் போது கலவரக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து தாக்கியது பெரிய வைரலானது. இன்று இஸ்லாமியர் ஒருவரை உடை இன்றி கலவரக்காரர்கள் எல்லோரும் அவரை தரதரவென இழுத்து செல்லும் வீடியோவும் பெரிய வைரலாகி உள்ளது.

ஒரே புகைப்படம்
இந்த கலவரத்தை மொத்தமாக விளக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த கலவரதுஇல் மவ்ஜ்பூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய கடைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. ஷிவா என்ற இந்துவின் வாகன உதிரி பாக கடை பாதுகாப்பாக இருக்கிறது. கடைசியில் இருக்கும் தியாகி என்ற இந்துவின் கடையும் பாதுகாப்பான இருக்கிறது. ஆனால் இடையில் இருக்கும் ஜூல்பிகர் என்ற இசுலாமியரின் கடை மட்டும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
|
இந்துக்களின் கடைகள்
சரியாக இந்துக்களின் கடைகளை விட்டு விட்டு இஸ்லாமியர்களின் கடைகளை மட்டும் தேடி தேடி அடித்து உடைத்து இருக்கிறார்கள். டெல்லி முழுக்க இஸ்லாமியர்களின் உடைமைகள் இப்படித்தான் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை இந்த புகைப்படம் மொத்தமாக விளக்கிவிட்டது. இதுதான் உண்மையான குஜராத் மாடல் என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications