கலவரம் செய்பவர்களுக்கு.. புல்டோசர்தான் பதிலடி.. பாஜக கபில் மிஸ்ரா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து
டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தையொட்டி வன்முறை நடந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து நுழைந்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களாக மாறிய வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கா ஆகியோரை வெளியேற்ற புல்டோசர் மூலம் நடவடிக்கை அவசியம் என பாஜகவின் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லயில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரும் காயமடைந்தனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாஜக, ஆம்ஆத்மி மோதல்
இந்நிலையில் தான் தலைநகர் டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக அரசியல் செய்யப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்கள் ஆம்ஆத்மி கட்சியையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விமர்சனம் செய்கின்றனர். அதேபோல் ஆம்ஆத்மி கட்சியினர் பாஜகவை குற்றம்சாட்டி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை கடும் வார்த்தைகளால் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்த நிலையில் தற்போது முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா அரவிந்த் கெஜ்ரிவால் அரசை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.

எதிரியாக மாறிய நண்பர்
ஆம்ஆத்மி கட்சியில் செயல்பட்டு வந்த கபில் மிஸ்ரா அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதன்பிறகு கபில் மிஸ்ரா ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அனுமன் ஜெயந்தி தொடர்பான வன்முறை, டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக அவர் அவர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது:

கெஜ்ரிவாலின் மருமகன்கள்
‛‛டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை என்பது தீவிரவாத செயலாகும். இதில் வங்கதேச ஊடுருவல்காரர்களின் குடியேற்றம் அதிகரித்து உள்ள நிலையில் தான் இந்திய குடிமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வங்கதேசம், ரோஹிங்யா அகதிகள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களாக உள்ளனர். இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து வெளியேற்ற வேண்டும்'' என கூறியிருந்தார்.

புல்டோசர் நடவடிக்கை ஏன்
இந்நிலையில் இன்று கபில் மிஸ்ரா தனது டுவிட்டர் பதிவில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக கூறியுள்ளார். இதில் " டெல்லி வன்முறை என்பது வங்கதேச ஊடுருவல்காரர்களின் செயல் என்று நேற்றே கூறியிருந்தேன். டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களான வங்கதேசத்தினர், ரோஹிங்காவினரை வெளியேற்றும் சிகிச்சை தான் இந்த புல்டோசர்(ஆக்கிரமிப்பு அகற்றம்) நடவடிக்கை. இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து சட்டவிரோத ஊடுருவல்காரர்களை களையெடுப்பது அவசியம்'' என கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு அகற்ற தடை
டெல்லி வடக்கு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வடக்கு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புக் அகற்றும் நடவடிக்கை துவங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு இன்று உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications