டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடங்கிய நாடாளுமன்றம்.. லோக்சபா பிற்பகல் வரை ஒத்திவைப்பு.. ராஜ்யசபா 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!

டெல்லி கலவரத்தால் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வந்த நிலையில் மாநிலங்களை வரும் மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு சபாநாயகர் உத்தரவிட்டார் .

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி கலவரத்தால் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வந்த நிலையில் மாநிலங்களை வரும் மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு சபாநாயகர் உத்தரவிட்டார் .

மூன்று நாட்களுக்கு முன் மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை அவை நடைபெறுகிறது. ஆனால் கடந்த நான்கு நாட்களாக இந்த கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே டெல்லி கலவரம் தொடர்பான வாதத்தால் ஒத்திவைக்கப்ட்டது.

Delhi Violence: Lok Sabha adjourned till afternoon, Rajya Sabha till March 11 after ruckus

டெல்லி கலவரம் தொடர்பான அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தினமும் முடங்கியது. டெல்லியில் கலவரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். லோக்சபாவில் கலவரம் பற்றி விவாதம் செய்ய வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

டெல்லி கலவரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். தினமும் அவைக்கு முன்பாக வந்து கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர். நேற்றே இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் .

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய், என் பிரதான், டீன் குறிகோஸ், ஆர் உன்னிதன், மாணிக்கம் தாக்கூர், பென்னி பெனான், குர்ஜீத் சிங் ஆகியோர் சபாநாயகர் மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக இன்றும் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் கடுமையான அமளி நடந்தது. எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது தவறு என்று கூறி அமளி செய்தனர்.

இதனால் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வந்த நிலையில் மக்களவை இன்று மதியம் இரண்டு மணி வரைக்கும் சபாநாயகர் ஓம் பிர்லா மூலம் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களை வரும் மார்ச் 11ம் தேதி வரை சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மூலம் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினம், திங்கள் மற்றும் செவ்வாய் ஹோலி காரணமாக விடுமுறை என்பதால் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Delhi Violence: Lok Sabha adjourned till afternoon, Rajya Sabha till March 11 after heavy ruckus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X