தள்ளிப்போட்டது தவறு.. வெள்ளிக்கிழமையே விசாரியுங்கள்.. டெல்லி கலவர வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
டெல்லி கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வரும் வெள்ளிக்கிழமையே டெல்லி ஹைகோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வரும் வெள்ளிக்கிழமையே டெல்லி ஹைகோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இதன் வழக்கு விசாரணை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது .கடந்த வாரம் டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் விசாரித்தார். இவர் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவிட்டார்.

ஆனால்
ஆனால் மறுநாளே இந்த உத்தரவு மாற்றப்பட்டது. அதன்படி டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் முன்னிலையில் டெல்லி கலவர வழக்கை ஒத்தி வைத்தார்.கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாத அவகாசம் கொடுத்து, வழக்கை டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் அமர்வு அடுத்த ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேல் முறையீடு வழக்கு
இதற்கு எதிராக இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மனுதாரர் ஹர்ஷ் மாந்தர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த மனுவில் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்று நடந்த விசாரணையில் ஹர்ஷ் மாந்தர் தரப்பு வழக்கறிஞர் கோலின் முக்கியமான வாதங்களை வைத்தார், அதில், பாஜக தலைவர்களின் பேச்சுதான் வன்முறையை தூண்டியது. துப்பாக்கியால் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று இவர்கள்தான் பேசியது. கபில் மிஸ்ரா பேசிய மறுநாளே கலவரம் வெடித்தது. அவர் தோல்வி அடைந்த தொகுதியில் கலவரம் வெடித்தது.

வீடியோ எப்படி
இதற்கான வீடியோ ஆதாரங்களை உங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். டெல்லி ஹைகோர்ட் முதலில் கொடுத்த உத்தரவு எப்ஐஆர் பதிய வேண்டும் என்பதுதான். அதே உத்தரவு உச்ச நீதிமன்றமும் கொடுக்க வேண்டும். இவர்கள் வெளியே சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதை அனுமதிக்க முடியாது என்று நேற்று கூறினார்கள்.

எதிர்வாதம்
இதை எதிர்த்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அப்படி பார்த்தால் ஹர்ஷ் மாந்தர் தவறாக மக்களை தூண்டும்வகையில் பேசிய வீடியோக்களும் இருக்கும். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவரும்தான் தவறாக பேசினார். ஒருவரை மட்டும் குறி வைப்பது தவறானது. டெல்லி ஹைகோர்ட் முதலில் பிறப்பித்த உத்தரவு தவறானது. அதை இங்கே வாசிக்க கூடாது. அந்த உத்தரவு மிகவும் தவறானது என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து குறிக்க தலைமை நீதிபதி போப்டே, இப்போது இதை விவாதிக்க நேரம் இல்லை. நீங்களா உட்காரலாம். முதலில் டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும். அதில் பேசப்பட்ட கருத்துக்களை குறித்து விசாரிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் வரை டெல்லி ஹைகோர்ட் வழக்கை ஒத்திவைத்தது தவறானது. உடனே இந்த வழக்கை ஹைகோர்ட் விசாரிக்க வேண்டும்

உத்தரவு
வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் விசாரிக்க வேண்டும். சூழ்நிலையை காரணம் காட்டி வழக்கை ஒத்திவைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் கூட குறைந்தது வழக்கை விசாரிக்கவாவது வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நாளை மறுநாளில் இருந்து விசாரிக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications