"நடக்க கூட முடியல!" உண்ணாவிரத போராட்டத்தால் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு ஆபத்து! மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இந்தாண்டு தண்ணீர் பஞ்சம் மிக மோசமாகவே இருக்கிறது. ஹரியானா அரசு டெல்லிக்குத் தர வேண்டிய நீரை முறையாகத் தரவில்லை என்ற புகார் இருக்கிறது. இதைக் கண்டித்து டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது உடல்நிலை ஆபத்தான நிலைக்குச் சென்ற நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லிக்கு தர வேண்டிய நீரில் தினசரி 100 மில்லியன் கேலன் தண்ணீர் ஹரியானா அரசு குறைத்துத் தருவதாகவும் இதுவே டெல்லியில் நிலவும் மோசமான தண்ணீர் பஞ்சத்திற்குக் காரணம் என்றும் ஆம் ஆத்மி கூறுகிறது.

AAP Delhi

டெல்லியில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கும் நிலையில், ஹரியானா அரசின் இந்த செயலை கண்டித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி நீர்வளத்துறை அமைச்சருமான அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.

உண்ணாவிரதம்: கடந்த நான்கு நாட்களாக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இன்று அதிகாலை அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்ற நிலையில், டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அதிஷி அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிஷியின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளை எட்டியது. டெல்லிக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை ஹரியானா அரசு விடுவிக்கவில்லை என்பதைச் சாடியே அவர் இந்த போராட்டத்தைத் தொடங்கினார். கடந்த ஜூன் 22ஆம் தேதி அவர் இந்த போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், அவரது உடல்நிலை மோசானது.

தொடர்ந்த போராட்டம்: அதீஷியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.. இருப்பினும், மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்காமல் அவர் போராட்டத்தைத் தொடர்ந்ததாக ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி: அதிஷிக்கு செய்யப்பட்ட உடல்நலப் பரிசோதனையில் அவரது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை அதிஷியின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆபத்தான நிலைக்குச் சென்ற நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் அப்போது நடக்கக் கூட முடியவில்லை. ஸ்ட்ரெச்சர் மூலமாகவே அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

என்ன சிக்கல்: டெல்லியில் உள்ள 28 லட்சம் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீரை வலியுறுத்தி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.. ஹரியானா அரசு டெல்லி மக்களின் குடிநீர் உரிமையை வழங்கும் வரை, ஹத்னிகுந்த் தடுப்பணையின் கதவுகள் திறக்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லிக்கு தர வேண்டிய நீரைக் காட்டிலும் தினசரி 100 மில்லியன் கேலன்கள் குறைவான தண்ணீரையே ஹரியானா வழங்குவதாகவும் இதுவே டெல்லியில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணம் என்றும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டுகிறது. டெல்லியில் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை மோசமாக்கி இருக்கிறது. இந்த மோசமான தண்ணீர் பஞ்சத்தால் டெல்லி மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் டேங்கர்களை நம்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+