பிரிஜ் பூஷன் கேஸ்.. பாஜக எம்பிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி கோர்ட் இன்று விசாரணை
டெல்லி: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று நீதிமன்றம் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்குகிறது.
பிரிஜ் பூஷன் மீது 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் உட்பட 7 வீராங்கனைகள் பாலியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடியாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள்/வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இதனையடுத்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. இதில் ஒன்று போக்சோ வழக்காகும். ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மே மாதம் 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட மல்யுத்த வீரர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. மட்டுமல்லாது அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒலிம்பிக் சங்கம் உட்பட பல அமைப்புகள் இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தன. தொடர் போராட்டம் மற்றும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் கொடுத்த அழுத்தம் காரணமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் கடந்த 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படுவது கைவிடப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.25,000 ஜாமீன் தொகையாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் பூஷன் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டி அணைப்பது குற்றமல்ல" என்று கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications