கவிதாவுக்கு ஜூன் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதா தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு ஜூன் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை ஸ்கிப் செய்திருந்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் கைது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
முதலில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கவிதா, பின்னர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திஹார் சிறையில் இருக்கும்போதே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கவிதாவை கைது செய்தது. பின்னர், 3 நாட்கள் விசாரணைக்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இந்த அனுமதியையடுத்து கவிதா சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை மே 20ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் தனக்கு ஜாமீன் கேட்டு கவிதா தாக்கல் செய்திருந்த மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூன் 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.
இதில் ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் மூலம் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலுக்கு செலவிட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் கவிதாவின் பங்கு முக்கியமானது என அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications