ஸ்டாலினை நேரிலேயே சந்திக்கும் மோடி! காங்கிரஸை வீழ்த்த ஸ்டாலினுடன் கரம் கோர்க்கும் பாஜக?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு களமிறங்கியுள்ளது.

ஏற்கனவே நடந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 131-வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், இந்த மசோதாவைத் தற்காலிகமாக நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் பாஜ உருக்கமாக உள்ளது.

Delimitation congress dmk mk stalin mk stalin

இதற்காக, தேசிய அரசியலில் தற்போதைக்கு மிகவும் உற்றுநோக்கப்படும் ஒரு முக்கிய காயை மோடி நகர்த்தத் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்த மசோதாவுக்கு திமுகவின் ஆதரவைக் கோருவதுதான்.

திமுக - காங்கிரஸ் விரிசல்: பிரதமருக்குக் கிடைத்த வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அதன் பின்னணியில் உருவான அரசியல் நகர்வுகளால் திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான பல கால உறவு முற்றிலும் முறிந்துபோயுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கசப்புகள் மற்றும் காங்கிரஸ் தலைமை காட்டிய அலட்சியப் போக்கு காரணமாக இருதரப்பு உறவில் கசப்பு ஏற்பட்டது. தேர்தல் தோல்விக்கு பின் திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாகவே கைவிட்டுவிட்டது.

தற்போது காங்கிரஸை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. இந்த விரிசலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மத்திய பாஜக அரசு வியூகம் வகுத்துள்ளது.

காங்கிரஸுக்குப் பாடம் புகட்ட நினைக்கும் திமுகவின் திட்டத்தை பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அவர்களின் ஆதரவைப் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக மோடி நேரடியாக ஸ்டாலினைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தென் மாநிலங்களின் அச்சமும், மத்திய அரசின் சமரச சூத்திரமும்

தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தென் மாநிலங்களின் மக்களவை இடங்கள் குறைந்து, வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற கடுமையான எதிர்ப்பை திமுக தொடர்ந்து முன்வைத்து வந்தது.

இருப்பினும், தற்போதைய சூழலில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் குறைந்தபட்சம் 50 சதவீத இடங்களை அதிகரிக்கும் புதிய பார்முலாவை மத்திய அரசு முன்வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திருத்தங்களுடன் மசோதா கொண்டுவரப்பட்டால், அதை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்ற திட்டம் திமுக தரப்பிலும் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸுக்குப் பெரிய பின்னடைவு?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸை முற்றிலுமாக ஓரங்கட்ட வேண்டும் என்ற இலக்கில் மோடி அரசு தெளிவாக உள்ளது. ஒருவேளை திமுக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தால் அல்லது வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தால், அது தேசிய அளவில் காங்கிரஸுக்குப் மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமையும்.

காங்கிரஸை வீழ்த்த திமுகவின் பலத்தைப் பயன்படுத்துவதும், அதேநேரத்தில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்குத் தேவையான எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் திரட்டுவதும் என மோடி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு உண்மையாக நடக்கும் பட்சத்தில், அது தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்தியாவின் தேசிய அரசியல் வரலாற்றிலும் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+