டிமானிடைசேஷன் திடீர் முடிவல்ல.. திட்டமிடலுடன் செய்யப்பட்டது.. பிரதமர் மோடி பேட்டி
டிமானிடைசேஷன் முறையாக திட்டமிடலுடன் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: டிமானிடைசேஷன் முறையாக திட்டமிடலுடன் செய்யப்பட்டதாகவும், பல முறை கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பே கொண்டு வரப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். 4.5 வருட ஆட்சியில் முதல்முறை அவர் இப்படி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார் . இந்த பேட்டியின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

டிமானிடைசேஷன்
அதில், டிமானிடைசேஷன் அவசர அவசரமாக கொண்டுவரப்படவில்லை. நாங்கள் எதோ திட்டமில்லாமல் கொண்டு வந்ததாக பேசுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு

எச்சரிக்கை விடுத்தோம்
நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். கருப்பு பணத்தை திருப்பி கொடுக்க சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தோம். நான் பிறரை போல செயல்படுவேன் என்று நினைத்தார்கள்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஏன்
அதனால்தான் டிமானிடைசேஷன் கொண்டு வந்தோம். அது நல்ல பலனை கொடுத்தது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நன்றாக திட்டமிட்டு செய்யப்பட்டது. ஆபத்து அதிகம் என்பதால் வீரர்களை கவனமாக இருக்க சொன்னார். சூரியன் அஸ்தமிக்கும் முன் வீரர்களை திரும்பி வர சொன்னேன்.

2 திட்டம்
நாங்கள் இரண்டு விதமான திட்டங்களை போட்டு இருந்தோம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் வீரர்கள் பாதுகாப்போடு மீண்டும் வர வேண்டும் கூறி இருந்தேன். அதன்படியே சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்?












Click it and Unblock the Notifications