சாதம் சாப்பிட்டாலும் சுகர் ஏறிடும்னு கவலையே வேண்டாம்! வந்தாச்சு டிசைனர் அரிசி! குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீரிழிவு நோயாளிகள் டிசைனர் அரிசியை சாப்பிட்டால் சுகர் ஏறவே ஏறாது. டிசைனர் அரிசி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த அரிசி சாப்பிட்டால் சுகர் ஏறும் என்ற கவலை இல்லை என்பதை நாங்கள் சொல்லவில்லை மத்திய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் CSIR-NIIST ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த சிறப்பு அரிசி, சாதாரண அரிசியின் தோற்றம், சுவை மற்றும் சமைக்கும் முறையைப் போலவே இருந்தாலும், அதில் புரத அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது (20% அல்லது அதற்கு மேல்).

Designer Rice

குறைந்த கிளைசமிக் இன்டெக்ஸ் (GI 54-க்கு கீழ்) உள்ளது. இது உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயராமல் கட்டுப்படுத்த உதவுகிறது. சாதாரண வெள்ளை அரிசியின் GI 70-க்கு மேல் இருக்கும் நிலையில், இந்த டிசைனர் அரிசி குறைந்த GI கொண்டதால், சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறையும்.

மேலும், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 போன்ற மைக்ரோ நியூட்ரியண்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.

இந்த அரிசி எப்படி தயாரிக்கப்படுகிறது?

அரிசி மாவுடன் இந்த ஊட்டச்சத்துக்களை கலந்து, இயற்கை அரிசி தானியங்களைப் போல வடிவமைத்து உருவாக்கப்படுகிறது. இது ஜெனெடிக் மாற்றம் செய்யப்பட்டது அல்ல; உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. கழுவும்போதும் சமைக்கும்போதும் சாதாரண அரிசியைப் போலவே இருக்கும், ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பம் தற்போது தொழில்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. டாட்டா கன்ச்யூமர் ப்ராடக்ட்ஸ், எஸ்எஸ் சோல் ஃபுட்ஸ் (தமிழ்நாடு) போன்ற நிறுவனங்கள் முதலில் இதை உற்பத்தி செய்ய உள்ளன. விரைவில் மேலும் பல நிறுவனங்கள் சந்தையில் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீரிழிவு நோய், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு அரிசி தானியத்தில் தீர்வு கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இனி சாதம் சாப்பிடும்போது பயம் வேண்டாம்!

சிறுதானிய கலவை அரிசி ,பழுப்பு அரிசி (Brown Rice),ஆர்கானிக் அரிசி , பாலிஷ்டு அரிசி (Polished Rice) என ஏற்கனவே இருக்கும் அரிசி வகைகள் வரிசையில் சேரும் இந்த டிசைனர் அரிசியும் உடல் நலம் தரும் என்பதால் இதை தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+