உத்தரகாண்டில் மேகவெடிப்பு.. கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய வெள்ளம்.. அதிரவைக்கும் ”வீடியோ” காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்டில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் ( Uttarakhand cloudburst) பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தராலி என்ற ஒரு கிராமமே மூழ்கிப்போனது. அந்த பகுதி இருந்த இடமே தெரியாமல் மாறிப்போயுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வரக்கூடிய சூழலில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஹர்சில் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டது.

devastation-in-uttarkashi-cloudburst-triggers-flash-floods-destroys-dharali-village

ஒரு கிராமமே மூழ்கிப்போனது

இதனால், அப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கங்கை நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, முக்கிய சாலைகள் சேதம் அடைந்துள்ளன. தராலி என்ற கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இது அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை முழுவதுமாக வெள்ளம் மூழ்கடித்தது. வெள்ள நீருடன் மணலும் கலந்து வந்தால், அந்த பகுதி இருந்த இடமே தெரியாமல் மாறியது. இப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேக்கள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

17 பேர் வரை பலி

17 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அங்கிருந்த வீடுகள், ஹோட்டல்கள் என அனைத்தும் அப்படியே அடித்து செல்லப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. காட்டாற்று வெள்ளத்திற்கு பிறகு அந்த பகுதி முற்றிலுமாக மாறி காட்சி அளிக்கிறது.

வெறும் மணலாக காட்சி தருவதால், பல வீடுகள், ஹோட்டல்கள் மண்ணில் புதைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். மீட்பு பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமியிடம் கேட்டறிந்தார்.

முழு வீச்சில் மீட்பு பணிகள்

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில், "உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+