இந்தியாவில் ஏ320 உள்பட 4 ரக விமானங்களை இயக்க தடை.. விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி உத்தரவு
டெல்லி: சாப்ட்வேர் கோளாறு காரணமாக ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் உள்பட 4 சீரிஸில் பயன்படுத்தப்பட்டு வரும் 41 ரக விமானங்களை இயங்க வேண்டாம். தொழில்நுட்ப கோளாறை சரிசெய்த பிறகு தான் அதனை இயக்க வேண்டும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஐரோப்பாவை சேர்ந்த விமான நிறுவனம் ஏர்பஸ் (Airbus). இந்த நிறுவனம் பல்வேறு மாடல் விமானங்களை தயாரித்து வழங்கி வருகிறது. நம் நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான் ஏர்பஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதாவது சூரிய கதிர்வீச்சால் ஏர்பஸ் விமானங்களின் விமான கட்டுப்பாட்டு டேட்டாக்களை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு விமானங்களும் தங்களின் தங்களின் சேவையை நிறுத்த வேண்டும் என்று ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பிரச்சனையை தவிர்க்க விமானத்தில் சாப்ட்வேர் அப்டேட் அல்லது ஹார்ட்வேர் ரிஅலைன்மென்ட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நிறுவனங்கள் மொத்தம் 560 விமானங்களை பயன்படுத்தி வரும் நிலையில் சாப்ட்வேர் அப்டேட் மற்றும் ஹார்ட்வேர் ரி அலைன்மென்ட் பணிகளை செய்து வருகிறது.
இதனால் நம் நாட்டில் 200 முதல் 250 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 6,000 விமானங்களின் சேவைகளின் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டின் விமான விபத்து ஏற்படாமல் தவிர்க்க இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA or Directorate General of Civil Aviation )முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ஏர்பஸ் பாதுகாப்பு எச்சரிக்கையால் அதன் அனைத்து விமானங்களுக்கும் சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர் மாற்றங்களை செய்து பரிசோதிக்க வேண்டம். அதுவரை ஏ 318 ஏ319, ஏ320, ஏ321/5 உள்ளிட்ட ரகங்களில் உள்ள அனைத்து சீரியல் எண் கொண்ட விமானங்களையும் இயக்க வேண்டாம். இந்த பாதுகாப்பு நடவடிக்கையை செய்த பிறகு தான் விமானங்களை மீண்டும் இயக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் ஏராளமான விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications