இண்டிகோவுக்கு மத்திய அரசு வைத்த ‛ஆப்பு'.. 10% சேவையை குறைக்க அதிரடி உத்தரவு.. பின்னணி
டெல்லி: இண்டிகோ விமான சேவைகள் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்றும் நாடு முழுவதும் சுமார் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக நாளை மாலை 5 மணிக்குள் இண்டிகோ தனது விமான சேவையில் 5 சதவீதத்தை குறைத்து திருத்தப்பட்ட அட்டவணையை வழங்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் தற்போது 10 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
நம் நாட்டில் இண்டிகோ விமான சேவைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமான சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விமான சேவை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்றைய தினம் 138 விமான நிலையங்களை இணைக்கும் வகையில் இண்டிகோ சார்பில் 1,800 விமானங்கள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.

இருப்பினும் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இன்று விளக்கம் அளித்தார். அதில், ‛‛இண்டிகோ விமான சேவைகள் பாதிப்புக்கு அந்த நிறுவனம் தான் காரணம். அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அறிக்கையை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
இதற்கிடையே தான் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ‛‛இண்டிகோ தனது விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க வேண்டும். தற்போதைய அட்டவணையின்படி விமானங்களை திறமையாக இயக்க தவறியதால், 5 சதவீதம் சேவைகளைகுறைத்து நாளை மாலை 5 மணிக்குள் திருத்தப்பட்ட அட்டவணையை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ சார்பில் குறைக்கப்படும் விமானங்களுக்கு பதிலாக அந்த வழித்தடத்தில் பிற நிறுவனங்களின் விமானங்களை இயங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படியே இண்டிகோ 5 சதவீத பயணத்தை குறைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகு இது நேற்று இரவு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
2025-26 ம் ஆண்டில் குளிர்கால அட்டவணையின்படி இண்டிகோ விமான நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2,200 விமான சேவைகளை இயக்கி வருகிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 9.66 சதவீதம் வரை அதிகமாகும். நம் நாட்டின் உள்நாட்டு சேவையில் மொத்தம் 65 சதவீதத்தை இண்டிகோ தான் பூர்த்தி செய்கிறது.
டிசம்பர் 2ம் தேதி முதல் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இண்டிகோவிற்கு கடிவாளம் போட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ஒரு நிறுவனத்தை மட்டுமே அதிகமாக நம்பி இருப்பதால் தான் கடந்த ஒருவாரமாக பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.
இதனால் இண்டிகோவின் சேவைகளை படிப்படியாக குறைத்து அதற்கான வழித்தடத்தில் பிற நிறுவனங்களின் விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய விமான நிறுவனங்களையும் ஊக்குவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக இண்டிகோ தனது சேவையில் 10 சதவீதத்தை குறைத்து அதற்கான முழு விவரத்தை வழங்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடியாக உத்தரவிட்துள்ளது.
தற்போது வரை இண்டிகோ விமான சேவை தனது முழு சேவைகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வரவில்லை. இப்படியான சூழலில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் இந்த உத்தரவு இண்டிகோவின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications