களத்தில் 5 ஐஸ்.. கனடாவிற்கு "உளவு ரகசியத்தை" அனுப்பிய அந்த நாடு? ட்ரூடோ இந்தியாவை சீண்ட என்ன காரணம்
டெல்லி: கனடாவில் சீக்கிய தீவிரவாதி இந்தியா மூலம் கொலை செய்யப்பட்டதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு பின் அந்த நாடு கண்டறிந்த உளவு தகவல்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கனடாவிற்கு உளவு ரீதியாக "ஒரு நாடு" உதவி செய்ததாக கூறப்படுகிறது.
சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.

அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு பின் அவர்களே முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உளவு தகவல்: இந்த குற்றச்சாட்டிற்கு பின் அந்த நாடு மேற்கொண்ட உளவு தகவல்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கனடாவிற்கு உளவு ரீதியாக "ஒரு நாடு" உதவி செய்ததாக கூறப்படுகிறது. மனித உளவு மற்றும் சிக்னல் மூலம் மேற்கொள்ளப்பட்ட உளவு வழியாகவே இந்த குற்றச்சாட்டை கனடா வைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது மனிதர்கள் வழியாக வழங்கப்பட்ட உளவு தகவல், சில சிக்னல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக இந்த தகவல்களை கண்டறிந்ததாக கனடா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிக்னல் என்றால் போன் பரிமாற்றம், மெயில் பரிமாற்றம், போனை ஒட்டுகேட்பது போன்ற உளவு பணிகள்.ஆகும் அதேபோல் கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் Five Eyes intelligence குழுவை சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவு தகவலை கனடாவிற்கு வழங்கி உள்ளதாம்.
இதிலும் இந்தியாவிற்கு எதிரான தகவல் அடங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உளவு தகவல்கள் காரணமாகவே சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார்.
யார் இந்த குழு?: இந்தியா கனடா மோதலில் ஃபைவ் ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.
ஐந்து கண்கள் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இது 1946 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியானது கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு தொடர்பான அமைப்பு ஆகும். முதலில் அமெரிக்கா - ஐரோப்பா இடையிலான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் யுனைடெட் கிங்டம்-யுனைடெட் ஸ்டேட்ஸ் கம்யூனிகேஷன் இன்டலிஜென்ஸ் ஆக்ட் (UKUSA) ஒப்பந்தம் என்று இது அழைக்கப்பட்டு அதன்பின் மற்ற 3 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டது.
தற்போது இந்த குழு Five Eyes intelligence alliance என்று அழைக்கப்படுகிறது. இந்த 5 நாடுகள் தங்களுக்கு உள்ளேயே உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ளும். முக்கியமான உளவு விஷயங்களை பகிர்ந்து அதில் நடவடிக்கை எடுக்கும். பெரிய விசாரணைகளில் உதவும். 2005 வரை இந்த குழு ரகசியமாக இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா - ஐரோப்பா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த குழு உருவாக்கப்பட்டது.

மேற்கு உலகின் அதி தீவிர ரகசியங்களை இந்த நாடுகள் தங்களுக்கு பகிர்ந்து கொள்ளும். இதை பகிர STONEGHOST network என்ற நெட்வொர்க்கை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் கசியாமல் மிக கட்சிதமாக இவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த அமைப்புதான் இந்தியாவிற்கு எதிரான புகாரில் கூட்டறிக்கை வெளியிட வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்று கனடா கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த நாடுகள் இதில் கூட்டறிக்கை வெளியிடவில்லை. மாறாக இதில் நாடுகள் தனி தனியாக விசாரணை அவசியம் என்று கூறி உள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகியவை தனி தனியாக இதில் கண்டிப்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணை இதில் மிக முக்கியம் என்று கோரிக்கை வைத்துள்ளது. இது இந்தியாவிற்கு பிரஷராகி உள்ளது.












Click it and Unblock the Notifications