"அது" வேற பக்கத்துலயே.. 3 மாதம் கையிலேயே வைத்து கொண்டு சுற்றிய கொலையாளி.. "தலை" எங்கேடா.. டெல்லி ஷாக்
அப்தாப் ஷ்ரத்தாவின் எலும்புகளை கிரைண்டரில் போட்டு பவுடர் ஆக்கினாராம்
டெல்லி: நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் டெல்லி ஷ்ரத்தா கொலையில் வெளியாகி உள்ளது.. அந்தவகையில், இப்போதும் முக்கிய தகவலை டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த பயங்கரத்தைவிட, அந்த கொலைக்கு பின் நடந்த சம்பவங்கள்தான் அதைவிட நடுக்கத்தை பொதுமக்களுக்கு இந்த டெல்லி சம்பவம் ஏற்படுத்தியது..
டெல்லியில் கடந்த மே மாதம் 18-ம் தேதி மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். ஷ்ரத்தாவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த அஃப்தாப் பூனாவாலா அவரைக் கொலை செய்தார்.

தலைகாணி
இவர்களுக்குள் தகராறு அன்றைய தினம் பெரிதாகிவிடவும், ஷ்ரத்தா கத்தி கூச்சல் எழுப்பியதால், அஃப்தாப்புக்கு ஆத்திரம் அதிகமானது.. ஷ்ரத்தாவின் வாயையும் மூக்கையும், தலைகாணியை எடுத்து நீண்ட நேரம் அழுத்தியதில், ஷ்ரத்தா துடிதுடித்து இறந்தார்.. இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க அப்தாப் எடுத்துக் கொண்ட முயற்சி, அனைவரையும் உறைய செய்துவிட்டது.. 300 லிட்டர் ப்ரிட்ஜை சடலத்தை மறைக்கவே வாங்கியுள்ளார்... உடலை வைப்பதற்காக பிரத்யேகமாக ஃபிரிட்ஜ் வாங்கியிருந்தார்..

பீஸ் பீஸான எலும்பு
பிறகு, தான் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார். 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து, ஒவ்வொரு பகுதியாக எடுத்துசென்று காட்டில் போட்டார்... காதலியை 35 துண்டுகளாக எப்படி வெட்ட முடியும்? இவ்வளவு கொடூரமாக கொலை செய்யவே முடியாது என்பதால், இதற்கு பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்றும், அதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளும் எழுந்தன..

உடல் துண்டுகள்
ஷ்ரத்தா படுகொலைக்குப் பிறகும், தொடர்ந்து 10 நாட்களாக ஷ்ரத்தாவின் போன், கிரெடிட் கார்டுகளை அப்தாப் பயன்படுத்திவந்தார்.. ஷ்ரத்தாவின் நண்பர்கள் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.. இதனால் அவர்கள் ஷ்ரத்தாவின் அப்பா மூலம் போலீஸில் புகார் செய்தனர்.. அதைத் தொடர்ந்தே மும்பை போலீஸாரும், டெல்லி போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தியதில் இந்தப் படுகொலையைக் கண்டுபிடித்தனர். பிறகு, அப்தாப் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.. விசாரணையும் நடத்தப்பட்டு, ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் எங்கெங்கு போடப்பட்டன என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்..

DNA டெஸ்ட்
அப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் ஷ்ரத்தாவின் டிஎன்ஏ-வுடன் ஒத்துப்போனது. அதோடு ஷ்ரத்தாவைக் கொலைசெய்தது குறித்து அப்தாப் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருந்தார். நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்தேன் என்று தன்னுடைய வாக்குமூலத்தில் கூறினார்.. இதையடுத்து, குற்றப்பத்திரிகையோடு எலெக்ட்ரானிக் ஆதாரங்கள், தடயவியல் ஆய்வு முடிவுகளும் குற்றப்பத்திரிகையோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன... இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் புதிய தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது... இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது..

எலும்பு பவுடர்
இயந்திரத்தை எப்படி கொலை செய்யப்பட்டது, உடல் பாகங்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் 6,600 பக்க குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.. 100 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.. ஷிரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கினாராம் அப்தாப்.. அதாவது, கிரைண்டிங் மிஷினில் போட்டு, ஷ்ரத்தாவின் எலும்புகளை அப்தாப் பவுடர் ஆக்கினாராம்.. அதுமட்டுமல்ல, கொலை செய்த 3 மாதங்களாகவே ஷ்ரத்தாவின் தலையை தன்னிடம்தான் வைத்திருந்திருக்கிறார்.. அதற்கு பிறகே, தலையை அப்தாப் அப்புறப்படுத்தி இருக்கிறார்..

20 பீஸ்கள்
முதலில் ஷ்ரத்தாவின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி எறிய திட்டமிட்டிருந்தாராம்.. ஆனால், போலீசில் சிக்குவோம் என்ற பயத்தில், அந்த திட்டத்தை கைவிட்டுள்ளார். பிறகு, ரம்பம், சுத்தியல், கத்தி உள்ளிட்டவற்றை வாங்கி, ஷ்ரத்தாவின் உடலை, துண்டுகளாக்கியுள்ளார். இதுவரை, 20 உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.. ஆனால், தலை உட்பட மற்ற முக்கிய பாகங்கள் கிடைக்கவில்லை.. ஆனால், ஷ்ரத்தாவின் தலையைத்தான் அவர் கடைசியாக தூக்கி வீசியுள்ளார்.. இப்போது தலையை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள் போலீசார்.. இதெல்லாம் கேட்டு டெல்லி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. உண்மையாக நேசித்த பெண் மீது என்னதான் ஆத்திரம் இருந்தாலும், இந்த அளவுக்கு ஒரு உயிரை, ஒருவனால் கொல்ல முடியுமா??












Click it and Unblock the Notifications