"கொக்கி" போட்ட பாஜக.. ஆபரேஷன் தாமரை ஆரம்பம்.. மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ.. கைதாகிறாரா
மணீஷ் சிசோடியோ குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளதுடன் விளக்கமும் கூறியுள்ளது
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு சொன்னதாக, மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது.. அத்துடன், தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையிலேயே அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக விளக்கமும் சிபிஐ அதிகாரிகள் தந்துள்ளனர்.
விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதிலும் அனைத்து கட்சிகளையும்விட முந்திக்கொண்டு களமிறங்கி மும்முரமாகி வருகிறது பாஜக.
காங்கிரஸ் கட்சி சமீபகாலமாகவே பலவீனமாகிவரும் சூழலில், ஆம்ஆத்மி மேலெழுந்து வர ஆரம்பித்துவிட்டது.. காங்கிரஸின் கோட்டைகளையும் மெல்ல மெல்ல கைப்பற்ற தொடங்கிவிட்டது.. அந்த வகையில் காங்கிரசுக்கு இது எரிச்சல் என்றாலும், பாஜகவுக்கு லேசான கலக்கத்தை ஆம் ஆத்மி ஏற்டுத்தி வருகிறது.

டெல்லி
எனவே, பாஜகவின் பிரதான கவனம் ஆம் ஆத்மி மீது குவிந்து வருவதை தவிர்க்க முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், குஜராத்திலும் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், ஒரு புது பிரச்சனை கிளம்பி உள்ளது.. டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும் சரி, கட்சியிலும் சரி, கெஜ்ரிவாலுக்கு அடுத்த முக்கிய இடத்தில், அதாவது துணை முதல்வராக இருப்பவர், மணீஷ் சிசோடியா.. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடுதிப்பென்று சோதனை நடத்தினர்...

டாக்குமெண்ட்கள்
அப்போது பல முக்கிய டாக்குமெண்ட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.. ஆனால், இது குறித்து மணீஷ் சிசோடியா ஒரு விளக்கம் தந்தார்.. பழிவாங்கும் நோக்கத்திலேயே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் அப்படி எந்த டாக்குமெண்ட்டும் கைப்பற்றப்படவில்லை என்றார்.. எனினும், மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்..

9 மணி நேரம்
டெல்லியில் உள்ள சிபிஐ ஆபிசில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது... இதையடுத்து, மணீஷ் சிசோடியாவும் நேற்றைய தினம் சிபிஐ ஆபீசில் ஆஜரானார்... அவரிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா சொன்னதாவது: சிபிஐ ஆபீசில் அதிகாரிகளை சந்தித்தேன்.. என் மீதான இந்த முழு வழக்கும் போலியானது, பொய்யானது என்பதை என்னிடம் நடத்திய இந்த 9 மணி நேர விசாரணையில் எல்லாத்தையும் புரிந்து கொண்டேன்... இந்த கேஸ், என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக கிடையாது..

ஆபரேஷன் தாமரை
டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இப்படிப்பட்ட விசாரணை என்னிடம் நடத்தப்பட்டுள்ளது.. ஆனால், ஆம் ஆத்மியை விட்டு, பாஜகவுக்கு செல்ல மாட்டேன்.. முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள்.. அதையும் மறுத்துவிட்டேன்' என்றார்.. மணீஷ் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டு, தேசிய அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் கூட்டிவிட்டது.. காரணம், மாற்று கட்சியில் உள்ளவர்களை, வலைவீசி பிடிப்பது பாஜகவுக்கு கைவந்த கலை என்பதால், இந்த குற்றச்சாட்டை முழுவதும் அரசியல் களத்தில் யாராலுமே நிராகரிக்க முடியவில்லை..

அரெஸ்ட்?
இந்நிலையில், சிபிஐ மணீஷ் சிசோடியோ குற்றச்சாட்டை மறுத்துள்ளது.. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சேருமாறு சொல்லவேயில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது... மேலும், இந்த சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டதுதான் என்றும் சிபிஐ வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது... இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்..

ஜோடிப்பா?
அதில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் சிசோடியா பங்கெடுப்பதை தடுக்கும் நோக்கத்தில் அவர் கைது செய்யப்படலாம்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவு டிசம்பர் 8-ல் வெளியாகிறது.. அதுவரை அவரை சிறையில் வைக்க முடிவு செய்துள்ளனர் என்றார்.. உண்மையிலேயே சிசோடியா கைது செய்யப்படுவாரா? அல்லது இந்த வழக்கு என்பதே ஜோடிக்கப்பட்ட ஒன்றா? அல்லது பாஜகவுக்கு வரும்படி சிசோடியா நிர்ப்பந்தப்படுத்தப்பட்டாரா? என்பதெல்லாம் தெரியவில்லை.. எனினும் சிசோடியா பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications