கவனிச்சீங்களா? மோடி பற்றி அப்பவே அடித்து சொன்ன நிர்மலா சீதாராமன் கணவர்.. அச்சு பிசகாம நடக்குதே!
டெல்லி: பிரதமர் மோடி பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குறிப்பிட்ட சில விஷயங்கள் தற்போது ஏறக்குறைய உண்மையில் நடக்க தொடங்கி உள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'இந்தியாவின் வரைபடம் மாறும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஊடகங்களில் அவர் பேசுகையில், 2024ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியா மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்காது. உங்களால் இந்தியாவை அடையாளம் கூட காண முடியாது. அந்த அளவிற்கு நாடு மோசம் ஆகும். மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார். மோடியே வெறுப்பு பேச்சுக்களை இனி நேரடியாக பேசுவார்.
இதுவரை கட்சியினர் மட்டுமே இஸ்லாமியர்களை நேரடியாக விமர்சித்த நிலையில் மோடியே அதை பற்றி பேசுவார். மோடி இனி அமைதியாகவோ, நுட்பமாகவோ பேச மாட்டார். வெளிப்படையாக நிலைப்பாட்டை பேசுவார். வெறுப்புப் பேச்சுகளை அவர்கள் எதோ பொருளாதார புரட்சி போல பேசுவார்கள், என்று எச்சரித்து இருந்தார்.
எச்சரிக்கை - மோடி பேச்சு: அதாவது மோடியே இனி வெளிப்படையாக சில கடுமையான கருத்துக்களை பேசுவார் என்று அவர் கூறி இருந்தார் . இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்லாமியர்களை வந்தேறிகள் என்று மோடி வெளிப்படையாக கூறி உள்ளார்.
ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
எழுந்த சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார். மோடியே வெறுப்பு பேச்சுக்களை இனி நேரடியாக பேசுவார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குறிப்பிட்ட நிலையில் இந்த பேச்சு மோடி மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை வெறுப்பு பேச்சு என்று 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். மெயில் மூலம் அவர்கள் இந்த புகார்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளன
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications