ஹாஸ்டலில்.. பெண்ணை டக்கென "கட்டிப்பிடித்த" செக்யூரிட்டி.. அலறி ஓடிய மாணவிகள்.. அடுத்து நடந்த கொடுமை
லேடீஸ் ஹாஸ்டலில் செக்யூரிட்டி அத்துமீறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
டெல்லி: இளம்பெண்களை கட்டிப்பிடித்து, தகராறு செய்துள்ளார் ஒரு செக்யூரிட்டி.. இது சம்பந்தமாக யாருமே புகார்களை தந்தும் எடுத்துக் கொள்ளாத நிலையில், மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது..!
தலைநகர் டெல்லியின் கரோலா பாக் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த லேடீஸ் ஹாஸ்டலில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.. பெரும்பாலானோர் இளம்பெண்கள்தான்.
Recommended Video
வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.. பலர் கல்லூரியில் படித்தும் வருகின்றனர்.

லேடீஸ் ஹாஸ்டல்
இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே, ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியது.. அந்த வீடியோவில், லேடீஸ் ஹாஸ்டலின் உள்ளே மாடிப்பகுதியில் பெண்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. பிறகு அவர்கள் அனைவரும் திடீரென அலறியடித்து ஓடுகிறார்கள்.. அங்கே, அந்த லேடீஸ் ஹாஸ்டர் செக்யூரிட்டி, அங்கு தங்கியிருக்கும் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கொண்டு விடவில்லை.. அந்த இளம்பெண் கதறி துடிக்கிறார்.. ஆனாலும், இறுக்கமாக கட்டிப்பிடித்து பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்தியுள்ளார்..

ஹாஸ்டல் ஓனர்
அதேபோல, அங்கிருந்த பெண்களையும் விரட்டிப்பிடித்து சித்ரவதை செய்கிறார்.. அந்த செக்யூரிட்டி மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டது.. இதைப்பார்த்து ட்விட்டர்வாசிகள் கொந்தளித்தனர்.. இந்த சம்பவம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது... ஆனால், யாருமே அதை கண்டுகொள்ளவில்லை. முன்னதாக, இந்த ஹாஸ்டல் ஓனர், புகார் தந்தார்.. அப்போதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்கள்..

கமிஷன் அதிரடி
இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்தில் மகளிர் ஆணையம் தலையிட்டது. நடந்த சம்பவம் குறித்து ஏன் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காவல் துறைக்கு, டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் சுவாதி மலிவால் நேற்றைய தினம் கடிதம் எழுதினார்... இதற்கு பிறகுதான், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய, அந்த செக்யூரிட்டி மீது டெல்லி போலீசார் தானாக முன்வந்து இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்..

வாக்குமூலம்
ஆனால், இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "புகார்தாரர் வாக்குமூலம் அளிக்க முற்றிலும் சட்ட ரீதியாக வாய்ப்பில்லை என்பதால், சட்ட ரீதியான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில், சிசிடிவி வீடியோவை ஆதாரமாக வைத்து, காவல் துறை இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குத்தொடர்ந்துள்ளது" என்று விளக்கம் தந்துள்ளார்.. எனினும், போலீசார் தானாக வழக்குத் தொடர்ந்த பிறகுதான், டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications