‛‛கருத்து வேறுபாடு’’.. இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது ஏன்? பரபர பின்னணி
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள இந்திய தேர்தல் கமிஷனில் ஆணையராக இருந்த அருண் கோயல் திடீரென்று நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் அவர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் உள்ள பரபரப்பான காரணம் வெளியாகி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒரு தலைமை ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல் தேர்தல் ஆணையராக அருண் கோயல் இருந்தார். இன்னொரு தேர்தல் ஆணையர் பொறுப்பு காலியாக உள்ளது.

இதனால் 3 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 2 பேர் மட்டுமே பணி செய்து வந்தனர். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் தீவிரமாக பணி செய்து வந்தனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைதியான முறையில் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் தான் திடீரென்று நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்த அருண் கோயல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அவர் தனது தேர்தல் ஆணையர் எனும் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். ஜனாதிபதி திரெளபதி முர்மு அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அருண் கோயல் விலகி உள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் அருண் கோயல் தனது பொறுப்பை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில் அருண் கோயலும் விலகி உள்ளார். இதனால் 2 தேர்தல் ஆணையர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டும் பொறுப்பில் உள்ளார்.
இதனால் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு திட்டமிட்டப்படி வரும் 15ம் தேதிக்குள் வெளியாகுமா? இல்லாவிட்டால் தேர்தல் தேதி அறிவிப்பு என்பது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் அருண் கோயல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அருண் கோயல் தனது ராஜினாமா கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் சொந்த காரணம் என்றால் என்ன? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக அவர் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தாரா? என விசாரித்தபோது அப்படி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அருண் கோயல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாறாக அவர் அருண் கோயலுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தான் ராஜினாமாவுக்கு காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அதாவது சில கோப்புகள் தொடர்பாக தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications