கிம் ஜாங் உன்-னுடன் டின்னர் சாப்பிடுவீங்களா? ஜெய்சங்கர் பதிலால் சிரிப்பால் அதிர்ந்த அரங்கம்..
டெல்லி: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னுடன் டின்னர் ஓகேவா? என்று கேட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்ன பதில் என்பது அரங்கத்தில் உள்ள அனைவரையும் சத்தமாக சிரிக்க வைத்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் ஜெய்சங்கர். ஏற்கனவே அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஜெய்சங்கர் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த சமயங்களில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு ஜெய்சங்கர் சொல்லும் பதில் கவனம் பெறும்.
அதேபோல் வெளிநாடு சுற்றுப்பயணத்தின்போதும் இந்தியாவை சிக்க வைக்கும்படியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு உள்அர்த்தம் புரிந்து ஜெய்சங்கர் சொல்லும் பதில் அவ்வப்போது பேசப்படும். மேலும் அந்த வீடியோ என்பது இணையதளங்களில் வெளியாகி பரவும். அந்த வகையில் தான் தற்போது ஜெய்சங்கரிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் சொல்வது என்ன? பாஜக - காங்., கூட்டணி மோதல்.. ஆட்சி யாருக்கு தெரியுமா?
அதாவது தனியார் நிகழ்ச்சியில் ஜெய்சங்கரிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்கிறார். தொகுப்பாளர், ‛‛கிம் ஜாங் உன் அல்லது ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யாருடன் டின்னர் சாப்பிட விரும்புவீர்கள்?’’ என கேள்வி கேட்டார். கிம் ஜாங் உன் வடகொரியா அதிபராக உள்ளார். அவரது நாட்டில் சர்வாதிகாரி போல் ஆட்சியை செய்து வரும் அவர் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார். அதேபோல் அமெரிக்காவையே அவ்வப்போது மிரட்டுவதோடு, ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.
மாறாக ஜார்ஜ் சோரோஸ் என்பவரும் நம் நாட்டை பொறுத்தவரை சர்ச்சைக்குரிய நபராக அறியப்படுகிறார். இவர் இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர். மேலும் ஜார்ஜ் சோரோஸ் இந்துக்களுக்கு எதிரான வேலைகளுக்காக நிதி உதவி செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
‛ஹைட்ரஜன் ரயில்’ தெரியுமா? நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தும் மத்திய அரசு.. ஸ்பெஷலே இதுதான்!
இந்நிலையில் தான் தொகுப்பாளர், ‛‛கிம் ஜாங் உன் அல்லது ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யாருடன் டின்னர் சாப்பிட விரும்புவீர்கள்?’’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டதுமே சிரித்த ஜெய்சங்கர் சற்றும் யோசிக்காமல், ‛‛இது நவராத்திரி காலம். நான் விரதம் இருக்கிறேன்’’ என கூறினார். இதனை கேட்டதுமே அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி சிரித்தனர்.
அதாவது தொகுப்பாளர் கூறிய 2 பேருடன் டின்னர் சாப்பிட விரும்பவில்லை என்பதை சூசகமாக நவராத்தி விரதத்தை காரணமாக வைத்து ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications