ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் சொல்வது என்ன? பாஜக - காங்., கூட்டணி மோதல்.. ஆட்சி யாருக்கு தெரியுமா?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் வெளியானது. இந்த எக்ஸிட் போல் படி பார்த்தால் ஜம்மு காஷ்மீரின் தேர்தல் முடிவை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருப்பதும், நூலிழையில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பதால் கட்சியினர் இடையே பதற்றம் தொற்றி கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் பிடிபி மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மெகபூபா முப்தி முதல்வரான நிலையில் பாதியில் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு ஜனாதிபதி ஆட்சி அமலானது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட குழப்பத்துக்கு விடை காணும் வகையில் மத்திய பாஜக அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதோடு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரித்தது. அதற்கு ஜம்மு காஷ்மீர், லடாக் என பெயரிடப்பட்டது. இதில் லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் மட்டுமே சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் முதல் தேர்தலை எதிர்கொண்டது.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஏப்ரல், மே மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட அதிகமாகும். தற்போது சட்சடபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கி உள்ளது. அக்டோபர் 8 ம்தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளில் இருந்தும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும். அதாவது ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சியும் லேசாக அரியணை ஏற முடியாது. முதல்வர் பதவியை பெற கூட்டணி என்பது முக்கியம் என்பதை தான் காட்டுகிறது. இதன்மூலம் நிச்சயம் காஷ்மீரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு போட்டா போட்டி இருக்கும் என்பதை எக்ஸிட் போல் கருத்து கணிப்பு மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அதாவது டெய்னிக் பாஸ்கர் ( Dainik Bhaskar) வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 35 - 40 இடங்களிலும், பிடிபி 4- 7 இடங்களிலும், பாஜக 20 - 25 தொகுதிகளிலும், மற்றவர்கள் 12 - 16 தொகுதிகளிலும் வெல்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. அதேபோல் மேட்ரிஸ் ( Matrize) கருத்து கணிப்பில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 11- 15 இடங்களிலும், பிடிபி கட்சி 28 இடங்களிலும், பாஜக 25 - 1 இடங்களிலும், ம்றவர்கள் 0 - 1 இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதேபோல் பிபிள் பல்ஸ் (People Pulse) காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 33 - 35 தொகுதிகளிலும், பிடிபி 7 - 11 இடங்களிலும், பாஜக 23- 27 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4- 5 இடங்களிலும் வெல்வார்கள் எனவும், போல்ஸ் ஆப் போல்ஸ் கருத்து கணிப்பில் 30 - 35இடங்களிலும், பிடிபி கட்சி 11 - 15 இடங்களிலும், பாஜக 24- 29 தொகுதிகளிலும், மற்றவர்கள் 6 - 8 இடங்களிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-31 சீட்கள், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சிக்கு 11-15 சீட்கள், மக்கள் ஜனநாயக கட்சி 0-2 சீட், மற்றவர்கள் 0-1 சீட்டில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கருத்து கணிப்புகளிலும் யாருக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
மேலும் குலிஸ்தான் நியூஸ் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே வெல்லும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 28 முதல் 30 தொகுதிகளில் வெல்லும். பாஜக 28 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும். மெகபூபாவின் பிடிபி கட்சி 8 முதல் 16 இடங்களில் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் பெரும்பான்மை என்பது இல்லை.
இதனால் ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை தான் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இப்படி தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தான் ஆட்சியை முடிவு செய்யும். அப்படி பார்த்தால் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறும் பட்சத்தில் அதனுடன் மீண்டும் மெகபூபா முப்தி மற்றும் சுயேச்சைகள் கைகோர்த்தால் பாஜகவின் ஆட்சி அமையும். மாறாக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் வெல்லும் பட்சத்தில் அவர்கள் சுயேச்சை உள்பட பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்கலாம் என்பதால் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications