ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு.. நவ. 16க்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க கோரிக்கை வழக்கை அவர்கள் கோரிக்கையை ஏற்று நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம், பாண்டியராஜன், ஆர். நட்ராஜ், செம்மலை, சண்முகநாதன், மனோரஞ்சிதம், சரவணன், ஆறுக்குட்டி, சின்னராஜ், மாணிக்கம், மனோகரன் ஆகியே 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் பிறகு இவ்விரு அணிகளும் இணைந்து கொண்டனர்.

எனவே பன்னீர் செல்வம் அணி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தரப்பில் சபாநாயகரை வலியுறுத்தவில்லை. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால், இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்க தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், 11 சட்டசபை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர் தீர்ப்புக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பிலும், தினகரன் ஆதரவாளர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு, தாங்கள் தயாராகவில்லை என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று, 11 பேர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள், நவம்பர் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி












Click it and Unblock the Notifications