17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்க உள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. எனவே, 17 எம்எல்ஏக்களை, கடந்த ஜூலை மாதம், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.

சபாநாயகர் அதிரடி
காங்கிரசின் 14 எம்.எல்.ஏக்களும், மஜதவின் மூன்று பேரும் சபாநாயகரால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2023ல் முடிவடையும் வரை எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில்
நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது.

கால விரையம்
நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தார்மீகம் அவசியம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், நேரடியாக ஹைகோர்ட் சென்றிருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கால விரையத்தை தவிர்க்க நாங்களே விசாரணை நடத்தினோம்.

போட்டியிட தடையில்லை
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், 17 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லுபடியாகும். அதேநேரம், தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை இந்த சட்டசபை பதவி காலம், முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டது செல்லாது. அவ்வாறு உத்தரவிட சபாநாயகர் அதிகார வரம்பில் இடமில்லை. எனவே, 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிட தடையில்லை. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

போட்டியிட திட்டம்
எனவே வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஏற்கனவே அதே தொகுதியில் தேர்வாகி, தகுதி நீக்கத்திற்கு உள்ளான, 15 பேரும் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு வகையில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications