தீபாவளி போனஸ்.. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக அறிவிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. அதன்படி மொத்தம் 10.91 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,866 கோடி போனஸாக வழங்கப்படுகிறது.
துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளி பண்டிகையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத்தொகை (போனஸ்) ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பிரஸ்மீட்டில் கூறினார்.
இந்த போனஸ் அறிவிப்பின் மூலமாக மத்திய ரயில்வே துறையில் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.1,865.68 கோடி வரை போனஸ் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 11 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,028 கோடி போனஸ் வழங்கப்பட்டது. தற்போதைய அறிவிப்பால் மத்திய ரயில்வே ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர்
இந்த போனஸ் ரயில்வேயில் தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள், லோகோ பைலட், train guards, ஸ்டேஷன் மாஸ்டர், சூப்பர்வைசர், டெக்னீஷியன், ஹெல்பர்ஸ், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சக ஊழியர்கள் மற்றும் குரூப் ‛சி' ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை கிடைக்க உள்ளது. மத்திய ரயில்வே துறையில் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரயில்வே ஊழியர்கள் போனஸ் பெற உள்ளனர்.
நம் நாட்டில் செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை துர்கா பூஜையும், அக்டோபர் 2ம் தேதி தசரா பண்டிகையும், அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications