சிபிஐ விசாரணை வளையத்தில் முதல்வர்.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக கேவியட் மனு
Recommended Video

டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சிபிஐ வசம் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஒப்படைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிபிஐ விசாரித்தால், அரசியல் எதிர்காலத்திற்கு சிக்கல் ஏற்படும் என்று முதல்வர் தரப்பு கருதுவதாகவும், எனவே மேல்முறையீடு நிச்சயம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.. தமிழிசை அதிரடி!]

வாதத்தை கேட்க வேண்டும்
இந்த நிலையில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை துறை ஊழல் தொடர்பான வழக்குகளில், ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க, வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக வழக்கு
நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் 3120 கோடி ரூபாய் மதிப்புக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், திட்ட மதிப்பைவிட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நெடுஞ்சாலைத் துறை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

விசாரணை
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தங்கள் புகாரை உரிய வகையில் விசாரிக்கவில்லை என்பதால் முதல்வர் மீதான விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என்பது மனுவின் சாராம்சம். மனு விசாரணையின்போது, முதல்வரின்கீழ் உள்ள துறை என்பதால்தான், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சிபிஐ வசம்
ஆனால், இதை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வர் பதவியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்குமாறு நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது












Click it and Unblock the Notifications