திமுக ஐடி விங் நடத்தும் ஜனநாயகத்திற்கான ''இந்தியா'' கருத்தரங்கம்! களைகட்டிய டெல்லி அறிவாலயம்!
டெல்லி: திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஜனநாயகத்திற்கான ''இந்தியா'' கருத்தரங்கம் டெல்லியில் உள்ள அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
அதில் ''இந்தியா'' கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர். இந்திய இறையாண்மையையும், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பதற்கான வழிமுறைகள் குறித்துஇக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

டெல்லியில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கருத்தரங்கத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி லெனின் வரவேற்று பேசுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் பணி என்ற தலைப்பில் லோக்சபா முன்னாள் செயலாளர் தங்கப்பன் ஆச்சாரி, கூட்டாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் பேசுகிறார்.
அதேபோல் பிரபல பத்திரிகையாளர் சீமா சிஸ்தி, பொருளாதார அறிஞர் பேராசிரியர் அருண் குமார், பேராசிரியர் ஜெயதி ஜோஷ், ஆகியோர் முதல் அமர்வில் பேசுகிறார்கள். பிறகு மாலை 6.25க்கு தொடங்கும் இரண்டாவது அமர்வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்பு உரை நிகழ்த்துகிறார். அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் வில்சன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, சேலம் தரணிதரனி, ஜான் பிரிட்டாஸ் எம்.பி. என பல்வேறு பிரமுகர்கள் ஜனநாயகத்திற்கான ''இந்தியா'' கருத்தரங்க உரை நிகழ்த்துகிறார்கள்.
இதனிடையே இது குறித்து பதிவு வெளியிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளோடும், வழிகாட்டுதலோடும் இந்நிகழ்வு நடைபெறுவதாக கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications