‛உதயநிதி ஸ்டாலின் வாழ்க.. வேண்டாம் நீட், Ban நீட்’.. பதவியேற்பின்போது குரல் எழுப்பிய தயாநிதி மாறன்
டெல்லி: மத்திய சென்னை லோக்சபா தொகுதி எம்பியாக இன்று தயாநிதி மாறன் பதவியேற்றார். அப்போது ‛‛வாழ்க உதயநிதி.. வேண்டாம் நீட்.. நீட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எம்பிக்கள் பதவியேற்றனர். அதன்பிறகு இன்று 2வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். மதியம் 2 மணிக்கு தமிழக எம்பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

தமிழத்தை பொறுத்தவரை முதலில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அதன்பிறகு 2வது ஆளாக வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமி, 3வது நபராக தென்சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், 4வது நபராக மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் பதவியேற்றனர்.
இந்த வேளையில் தயாநிதி மாறன், ‛‛மக்களவையின் உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நான் ன் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்’’ என்றார்.
மேலும் ‛‛வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார், வாழ்க அண்ணா, வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், வாழ்க உதயநிதி ஸ்டாலின், வேண்டாம் நீட், Ban NEET’’ என கையை உயர்த்தி கூறியபடி தனது பதவியேற்பை முடித்தார். முன்னதாக தயாநிதி மாறன் பதவியேற்க தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றார். அப்போது திமுக எம்பிக்கள் மேஜையை தட்டி ஆரவாம் செய்தபடி ‛‛Come On.. Come On’’ என கோஷமிட்டனர்.

இருக்கையில் இருந்து எழுந்த தயாநிதி மாறன், ‛‛சத்தம் பத்தல.. கமான்.. கமான்’’ என்று கூறினார். இதை கேட்டவுடன் திமுக எம்பிக்கள் சத்தமாக ‛Come On.. Come On’ என்றனர். இதனால் லோக்சபா அரங்கமே அதிர்ந்தது. அதன்பிறகு தான் தயாநிதி மாறன் சிரித்தபடி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications