2018ன் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.. கனிமொழிக்கு விருது.. குவியும் பாராட்டு!
2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் வருடா வருடம் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இந்த வருடமும் இதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது.

அந்த வருடம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது, எழுப்பிய பிரச்சனைகள், நடந்து கொண்ட விதம், நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து கொண்ட விதம் என்று பல விஷயங்களை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த முறை 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் மகளிரணிச் செயலாளராகவும், மாநிலங்களவை திமுக குழுத்தலைவராகவும் கனிமொழி இருக்கிறார்.
இவர் இந்த விருதுக்கு தேர்வானதை அடுத்து பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக உறுப்பினர்கள் காலையில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications