டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள்.. இந்திக்கு எதிராக கெத்தாக பொங்கிய கனிமொழி!

இந்திக்கு எதிராக மாநிலங்களையில் திமுக எம்.பி கனிமொழி பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள்.. நாடாளுமன்றத்தில் விளாசிய கனிமொழி- வீடியோ

    டெல்லி: இந்திக்கு எதிராக மாநிலங்களையில் திமுக எம்.பி கனிமொழி பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

    திமுக கட்சி இந்தி எதிர்ப்பில் இருந்து வளர்ந்து சாதனை புரிந்த கட்சி. மக்களைவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்.பிக்கள் எப்போதும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாநிலங்களையில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது. நேற்று மாநிலங்களவையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா குறித்து விவாதம் நடந்தது.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    திமுக உறுப்பினர்கள் மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கனிமொழி தொடர்ந்து இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இவரின் பேச்சு அவரது அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாக பார்க்கப்படுகிறது.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    நேற்று பேசிய கனிமொழி, நான் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளேன். எங்களுக்கு சமூக நீதிதான் முக்கியம்.
    சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டுவர, முதன்முதலாக இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே நீதிக்கட்சி ஆட்சி என்பதை பதிவு செய்கிறேன். அந்த இடஒதுக்கீடும், இதுவும் எப்போதும் ஒன்றாக இருக்காது.

    முரண்

    முரண்

    தற்போது பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கே முரணானது. இது சட்டத்திற்கு எதிரானது. காலங்காலமாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டதே இந்த கோட்டா. ஆனால் அதை பறிக்கவே இந்த புதிய இடஒதுக்கீடு வருகிறது, என்றார்.

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் கனிமொழி பேசிக்கொண்டு இருக்கும் போது மாநிலங்களவை துணை சபாநாயகர் ''உங்கள் நேரம் முடிந்துவிட்டது'' என்று ஹிந்தியில் கூறினார். இதை கேட்டதும் கனிமொழி பேசுவதை நிறுத்தாமல் ''உங்களால் எனக்கு புரியக்கூடிய மொழியில் பேச முடியுமா?'' என்று கேட்டார். அதன்பின் துணை சபாநாயகர் ஆங்கிலக்கத்தில் அவரிடம் அமரும்படி கூறினார்.

    பெரிய வைரல்

    பெரிய வைரல்

    இவர் இந்திக்கு எதிராக குரல் கொடுத்ததும், அங்கிருந்த மாநில கட்சிகளின் எம்பிக்கள் ஆரவாரம் செய்தனர். மேடையை தட்டி கனிமொழிக்கு ஆதரவு அளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

    English summary
    Can you talk in launguage that I can understand? : DMK MP Kanimozhi speak against Hindi in Rajya Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X