ரயில்வே பட்ஜெட்: குஜராத்துக்கு 29% நிதி! தமிழ்நாட்டுக்கு 7.5%! இதுதான் சமத்துவமா? பி.வில்சன் கேள்வி
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், கடந்த காலங்களில் ரயில்வே திட்டங்களுக்காக குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதில்கள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து தனது x பக்கத்தில் வில்சன் பகிர்ந்திருப்பதாவது, "எனது நாடாளுமன்றக் கேள்விக்கு, நான் ரயில்வே அமைச்சகத்திடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

• எம்ஆர்டிஎஸ்(MRTS)-சிஎம்ஆர்எல்(CMRL) கையகப்படுத்துதலின் நிலை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள்
• தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களின் விவரங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள்
• ஆத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி கூடுதல் பாதைக்கு புதிய டெண்டர் கோர முன்மொழியப்பட்டுள்ளதா?
அமைச்சகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில், MRTS திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை புறநகர் ரயில் அமைப்பின் நீண்டகால ஒருங்கிணைப்பு காகிதத்திலேயே முடங்கிக்கிடப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 7.5 மடங்கு அதிக ரயில்வே நிதியை வழங்கியதாக ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து கூறி வருகிறது. ரயில்வே பட்ஜெட் 2009-14ம் ஆண்டு காலத்தில், ₹879 கோடி என இருந்தது. இப்போது அதாவது 2025-26-ல் இந்த நிதி ₹6,626 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ரயில்வே பட்ஜெட் தொகை ₹2.52 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இது ஒரு பிரம்மாண்டமான 25 மடங்கு அதிகரிப்பு ஆகும்.
தற்போதைய கேள்வி இதுதான், இந்த 25 மடங்கு அதிகரிப்புடன் ஒப்பிடும்போது.. ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு நிதியை பெற்றிருக்கிறது?
•குஜராத் - ₹589 கோடி → ₹17,155 கோடி → 29 மடங்கு
•டெல்லி - ₹96 கோடி → ₹2,539 கோடி → 27 மடங்கு
•சத்தீஸ்கர் - ₹311 கோடி → ₹7,470 கோடி → 24 மடங்கு
•மத்தியப் பிரதேசம் - ~₹652 கோடி → ₹14,738 கோடி → 23 மடங்கு
•மகாராஷ்டிரா - ₹1,171 கோடி → ₹23,778 கோடி → 20 மடங்கு
•உத்தரப் பிரதேசம் - ₹1,109 கோடி → ₹19,858 கோடி → 18 மடங்கு
•ராஜஸ்தான் - ₹682 கோடி → ₹9,960 கோடி → 15 மடங்கு
•ஒடிசா - ₹838 கோடி → ₹10,599 கோடி → 12.5 மடங்கு
•ஆந்திரப் பிரதேசம் - ₹886 கோடி → ₹9,417 கோடி → 11 மடங்கு
•ஹரியானா - ₹315 கோடி → ₹3,416 கோடி → 11 மடங்கு
•பீகார் - ₹1,132 கோடி → ₹10,066 கோடி → 9 மடங்கு
ஆனால் தமிழ்நாடு - ₹879 கோடி → ₹6,626 கோடி → வெறும் 7.5 மடங்கு மட்டுமே!
தேசிய ரயில்வே பட்ஜெட் 25 மடங்கு அதிகரித்தபோது, தமிழ்நாட்டிற்கு வெறும் 7.5 மடங்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், மத்திய அமைச்சர் இந்த 7.5 மடங்கு அதிகரிப்பை ஏதோ ஒரு சலுகை போல பெருமையுடன் மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஒரு மாநிலத்திற்கு 29 மடங்கும், மற்றொரு மாநிலத்திற்கு 7.5 மடங்கு மட்டுமே நிதி கிடைத்திருக்கிறது.
இது தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையையும், பிரச்சாரத்தின் போலியான தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டிற்கு நியாயம் தேவை - உங்கள் போலியான நிகழ்ச்சி நிரலுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அல்ல" என்று கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக்












Click it and Unblock the Notifications