Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘நான் இந்தி தெரியாத இந்தியன்.. பாஜக நாட்டை ஆள தகுதி இல்லை’ – நாடாளுமன்றத்தில் ஆ.ராசா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜக அரசு சிந்தூர் நடவடிக்கையை பெருமிதமாக பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கேள்வி கணைகளால் தாக்கி வருகிறார்கள். அதில் ஆ. ராசாவின் பேச்சு மிகவும் கவனம் பெற்றது. பாஜக அரசு எதற்கெடுத்தாலும் நேரு, இந்திரா காந்தி மீது பழி போடுவது தொடங்கி, பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் போர் ஆகியவற்றில் உளவுத்துறை என்ன செய்தது. பாஜகவுக்கு நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லை என்று பேசிய நாடாளுமன்றத்தை அதிர வைத்துள்ளார்

நாடாளுமன்றதில் ஆபரேஷன் சிந்தூர் விவாதம் மீது ஆ.ராசா பேசியபோது, "பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பேசியதில் பெருமை மட்டுமே வெளிப்பட்டது. அதில் கருத்து இல்லை. ஒன்றிய அரசு எந்த ஒரு பிரச்னைக்கும் நேரு மற்றும் இந்திரா காந்தி மீது குற்றம் சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் கந்தகார் கடத்தல் சம்பவம் நடைபெற்றது.

A Raja Sindoor

ஆபரேஷன் சிந்து தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அது வெற்றி என்று கூடாது. எனக்கு இந்தி தெரியாது. புரியவும் செய்யாது. ஆனால் நான் ஒரு இந்தியன். திமுக என்பது ஒற்றுமைக்கான கட்சி. இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் எங்களை தேச விரோதி போல சித்தரிக்க முயற்சி நடக்கிறது.

பஹல்காம் தாக்குதல் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவது வெட்கக் கேடு. இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது. முக்கியமாக பாகிஸ்தான் தாக்கப் போவதாக அமெரிக்க துணை அதிபர் இந்தியாவிடம் கூறியது வெட்கக்கேடானது.

உங்களிடம் உளவுத்துறை, ராணுவம், ரா உள்ளிட்ட அமைப்புகள் இருக்கின்றன. நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். தூங்கி கொண்டிருந்தீர்களா." அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர், "சம்பவம் நடைபெற்ற பிறகு தான் அமெரிக்க துணை ஜனாதிபதி, நம் பிரதமருக்கு அழைத்து பேசினார்." என்று பதில் அளித்தார்.

அதற்கு ராசா, "நான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேட்டியில் இருந்த தகவலை எடுத்துதான் சொல்கிறேன். ஒன்றிய பாஜக அரசுக்கு இந்த நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டது. மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். உங்களால் மதச்சார்பின்மையோ திராவிட கொள்கையையோ பின்பற்ற முடியாது.

கடைசிக்கு உங்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள். கார்கில் போர் மிகவும் தெளிவாக திட்டமிட்டு, எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டது. போர் முடிந்ததும் அவர் ஒரு கமிஷன் அமைத்தார். அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை சிதைத்துவிட்டனர்.

நாட்டிலேயே ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக எங்கள் முதலமைச்சர் பேரணி நடத்தினார். அதை மொத்த நாடும் பின்பற்றியது. நீங்கள் எங்களை இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளாவிடின் பரவாயில்லை. கார்கில் போரின்போது கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி வழங்கியது.

போர் நிறுத்தம் குறித்து அதிகாரபூர்வமாக டிரம்பும், அதன் பிறகு நம் பிரதமராலும் அறிவிக்கப்பட்டதுவிட்டது. ஒரு அமைச்சர் போர் இன்னும் முடியவில்லை என்கிறார். இன்னொரு அமைச்சர் போர் இல்லை என்கிறார். இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாறுபட்ட தகவல்களை வெளியிடுகிறார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறுகிறீர்கள். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான) பாகிஸ்தானை இணைக்கிறார்கள். இதைக் கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா. ஜனநாயக வழியில் எல்லாவற்றையும் ஆக்கபூர்வமாக கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+