Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி ஒகே! இந்தி திணிப்பு வேண்டாமே! கதி சக்தி விஸ்வ வித்யாலயாவுக்கு எதிராக சீறிய ராஜேஷ்குமார் எம்.பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை 'கதி சக்தி விஸ்வ வித்யாலயா' என பெயர் மாற்றுவதற்கு திமுக எம்.பி. ராஜேஷ்குமார் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

மத்திய பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.பி., தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை இந்த சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகமாக கருதுவதை தாம் வரவேற்பதாக கூறினார்.

Dmk MP Rajesh Kumar says, Dont want the Hindi name of Gati Shakti Vishwa vidyalaya

ஆனால் அதேசமயம் இந்திய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் என்ற பெயரை கதி சக்தி விஸ்வ வித்யாலயா என மாற்றுவது ஏன் என மத்திய அரசை வினவினார். இதனை எல்லா மாநில மக்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்றும், குறிப்பாக தமிழக, கேரளா போன்ற மாநிலங்களில் கதி சக்தி விஸ்வ வித்யாலயா என்றால் அது யாருக்கும் புரியாது என ராஜேஷ்குமார் எம்.பி. எடுத்துக்கூறினார்.

மேலும், தாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்றும் இந்தி மொழி திணிப்பதை தான் எதிர்க்கிறோம் எனவும் நாடாளுமன்றத்திலேயே அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

Dmk MP Rajesh Kumar says, Dont want the Hindi name of Gati Shakti Vishwa vidyalaya

'கதி சக்தி விஸ்வ வித்யாலயா' என்ற இந்தி பெயருக்கு பதில் இந்திய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் பெயரை ஆங்கிலத்தில் மாற்றுவது காலத்தின் அவசியம் என வலியுறுத்தியிருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி. தமிழகம் கடந்து நாடு தழுவிய அளவில் முக்கிய விவகாரமாக கருதப்படும் பல்வேறு சப்ஜெக்ட்கள் பற்றி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மைக்காலமாக குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

புற்றுநோயாளிகளுக்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் புரோட்டான் சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கடந்த வாரம் கூட ராஜேஷ்குமார் எம்.பி. பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+