தமிழச்சி தங்கபாண்டியன் சேலையில் பாரதியார் படம்! பெண் எம்பிக்களை திரும்பி பார்க்க வைத்த சுமதி!
டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்குமாறு திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் அணிந்துள்ள புடவையில் பாரதியாரின் திருவுருவம் பொருத்தப்பட்டிருப்பது முண்டாசு கவிஞரின் மீது அவருக்கு இருக்கும் பற்றை காட்டுகிறது.

மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், ஏழைகளின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கருணாநிதி. அவருக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
பாரதியாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் தான் கட்டியிருக்கும் சேலையில் பாரதியாரின் முகம் பதித்து டிசைன் செய்துள்ளார். வெள்ளை நிறத்தினாலான சேலையில் ஆங்காங்கே பாரதியாரின் முகம் கருப்பு நிறத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
பாரதியார்
எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சுதந்திர போராட்டத்தின் போது தேசபக்தியை தூண்டும் பாடல்களை எழுதினார், பெண் விடுதலைக்காகவும் சாதி மறுப்பு, குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் இவர் கடுமையாக போராடினார்.
நூல்கள் எவை
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பதஞ்சலி, விடுதலை பாடல்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சமூக சீர்திருத்தவாதியான பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழச்சி
இலக்கியவாதியான தமிழச்சி தங்கபாண்டியன் தனது சேலையில் பாரதியாரின் முகத்தை பிரிண்டு போட்டு அதை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.
யார் இந்த தமிழச்சி
சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழகத்தை சேர்ந்த பெண் கவிஞர், சமூக ஆர்வலரும் கூட! இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர். இவர் தமிழகத்தில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த தங்கப்பாண்டியனின் மகள். அது போல் தற்போது நிதித் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவின் உடன்பிறந்த மூத்த சகோதரியாவார்.
என்ன படித்தார்
தமிழச்சி, மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்றார். அது போல் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம் பெயர் தமிழர்களின் ஆங்கிலப் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
விருப்ப ஓய்வு
இவர் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் காவல் துறை அதிகாரி சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள். மூத்த மகளை திமுகவில் உள்ள மகேந்திரனின் மகனுக்கு மணம் முடித்துவைத்துள்ளார்.
இலக்கியவாதி
தமிழச்சி சிறந்த இலக்கியவாதி. இவரது தந்தை தங்கபாண்டியன் இறந்த போது கையறுநிலை பாடல் ஒன்றை எழுதினார். இதைத் தொடர்ந்து நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறுகதை எழுதுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். "பிசாசு" என்ற திரைப்படத்தில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார். பரதநாட்டியத்தையும் முறையாக கற்றுள்ளார்.
சேலைகள் அபாரம்
இவர் உடுத்தும் சேலைகள் நன்றாக இருக்கும். அதற்கு மேட்சிங்காக கையில் நெயில் பாலிஷ் வைத்திருப்பார். சேலைகளும் இங்கிலீஷ் கலரில் இருக்கும். பெரும்பாலும் முழுக்கை ரவிக்கையில் குளோஸ்டு நெக்தான் அணிவார். அந்த வகையில் இன்று பாரதியார் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்திற்கு வந்த அவர் கட்டியிருந்த சேலையில் பாரதியாரின் முகம் பதியபட்டிருந்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஒவ்வொரு ஆண்டும் தனது தாய் , தந்தை நினைவுநாளில் மிகவும் உருக்கமாக கவிதை எழுதுவார்.












Click it and Unblock the Notifications