டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கும் மசோதா- நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? கனிமொழி ரிலீஸ் செய்த வீடியோ!
டெல்லி: டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக கடுமையாக எதிர்த்தது என்பதற்கு ஆதாரமான வீடியோ பதிவை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கும் மசோதாவை திமுக எதிர்த்தது என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான கனிமொழி எம்பியின் சமூக வலைதளப் பதிவு: மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த வேண்டும் என்றும், இந்த கனிம வள மசோதாவே அதானிக்காக இந்நாட்டின் கனிம வளங்களை வாரிக்கொடுக்கும் முயற்சி என்றும், 28.07.2023 அன்றே நாங்கள் இதை எதிர்த்துப் போராடினோம்.

டங்ஸ்டன் உள்ளிட்ட "பகுதி-D" கனிமங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த இந்த மசோதாவை மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் இன்று டங்ஸ்டன் விவகாரமே வந்திருக்காது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்துப் போராடியது இந்த காணொளியில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications