தவெகவை டீலில் விடும் காங்கிரஸ்? எல்லாம் அதுக்காகத்தானா.. டெல்லி ஆலோசனையில் எடுத்த முடிவு என்ன?
டெல்லி: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை வலுவாக முன்வைத்து வரும் நிலையில், அக்கட்சி தவெக பக்கம் சாய தயாராக இருக்கிறதா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டு இருந்தது. இந்த சூழலில் டெல்லியில் சனிக்கிழமை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லி தலைமை ஆலோசனை நடத்தியது. இதில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரிரு மாதங்களே உள்ளன. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் தகிக்க ஆரம்பித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குரல் எழுப்பி வருவது திமுக கூட்டணி உடைகிறதா? என்ற பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக சொல்லிவிட்ட நிலையிலும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதனால், ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்று கடையை விரித்து வைத்து காத்திருக்கும் விஜய் பக்கம் காங்கிரஸ் கட்சி தாவ தயாராகி உள்ளதா? என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே விஜய்க்கும் ராகுலுக்கும் நல்ல நட்புறவு உள்ளது. எனவே தவெகவுடன் கூட்டணி என்று அரசல் புரசலாக எழுந்து வரும் பேச்சு.. உண்மையாகிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது. இத்தகைய பரபரப்புக்கு நடுவே இன்று டெல்லியில் இன்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை நேரில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
டெல்லியில் காங்கிரஸ் உயர்நிலைக்கூட்டம்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று பிற்பகல் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேசி வேணுகோபால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடம் தனித்தனியாக ஆலோசனை கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியிருக்கிறார். தலைமை எடுக்கும் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் பின்பற்றும்" என்றார்.
திமுக கூட்டணியிலே தொடரும்
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இன்று நடைபெற்ற ஆலோசனை மற்றும் தலைவர்களின் பேச்சை வைத்து பார்த்தால், திமுக கூட்டணியிலே தொடரும் முடிவை காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் முடிந்த வரை கூடுதல் சீட்களை பெற முயற்சிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் பிளானாக இருக்க கூடும் என்றும் தவெகவை நம்பி போக அந்த கட்சி தயாராக இல்லை என்பதையே, காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள் காட்டுவதாக அரசியல் விமர்சர்கள் கூறும் கருத்தாக உள்ளது. எது எப்படியோ இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சி செல்லும் ரூட் கிளியர் ஆக தெரிந்து விடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications