Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் எதிரொலித்த "உதயநிதி.." "இதெல்லாம் பேசாதீங்க.." சபாநாயகர் ஸ்ட்ரிக்ட்! எம்.பி.யால் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "ராஜேஷ்குமார் ஜி, மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்க... உங்களுக்கு நேரம் அதற்கு மட்டும் இருக்கு. இதெல்லாம் பேசாதீங்க" என்று மாநிலங்களவை துணை தலைவரே டென்ஷன் ஆகி, கண்டிக்கும் அளவுக்கு, உதயநிதியை புகழ்ந்து தள்ளியுள்ளார் திமுக எம்பியான கேஆர்எம் ராஜேஷ்குமார்.

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து அவர்களின் இடம் காலியானது.

காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான, வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி சோமு, கேஆர்என் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் போட்டியின்றியும் வெற்றி பெற்றனர்..

 பதவியேற்பு

பதவியேற்பு

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியபோது திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கேஆர்என் ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொண்டனர்... 3 பேருமே தமிழில்தான் பதவியேற்று கொண்டனர்.. இதில், கேஆர்என் ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, "வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி" என்று முழக்கமிட்டார்.

வைரலானது

வைரலானது

இதை பார்த்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, "முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது, வெளியில் போய் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம் (Slogans will not be part of Record.. Outside, you can say whatever) என்று கடிந்து கொண்டிருந்தார். இந்த வீடியோ ஒருபக்கம் வைரலானாலும், மற்றொரு புறம் விவாதங்களையும் எழுப்பியது.. இப்போதுதான் முதல்முறையாக தேர்தலில் போட்டியின்றி எம்எல்ஏவாகி உள்ளார் உதயநிதி.. அரசியலுக்கு வந்தும் சில காலம்தான் ஆகிறது..

சர்ச்சை

சர்ச்சை

அப்படி இருக்கும்போது எதற்காக டெல்லியில் சென்று அவர் பெயரை முழங்க வேண்டும்? முக ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த முழக்கமா இது? சபாநாயகரே கடுப்பாகிவிட்டாரே? என்றும் விமர்சிக்கப்பட்டது.. இப்போது இதே பிரச்சனை கிளம்பி உள்ளது.. இதே ராஜேஷ்குமார்தான், அதே உதயநிதியை புகழ்ந்து பேசப்போய், மறுபடியும் மக்களவையில் குட்டுப்பட்டுள்ளார்..

குன்னூர்

குன்னூர்

ராஜேஷ்குமார் பேசியபோது, "என்னை தேர்வு செய்த தளபதி ஸ்டாலின் அவர்களையும் இளைஞர் அணியின் எழுச்சி நாயகனாக விளங்கும் எங்கள் அண்ணன் உதயநிதி அவர்களையும் வணங்குகிறேன்... இந்திய படை தளபதி பிபின் ராவத் குன்னூரில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார்... தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். உடனடியாக நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு நீலகிரி மாவட்டத்திற்கு சென்று அங்கு இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று தனது இரங்கலை பதிவு செய்தார்.

மசோதா

மசோதா

நீலகிரி சென்று ராணுவ வீரர்களிடம் நிலையை குறித்து விசாரித்தார்" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே, மற்ற உறுப்பினர்கள் இதில் குறுக்கிட்டனர்.. உடனே அவையை நடத்தி கொண்டிருந்த, மாநிலங்களவை துணை தலைவர் சஸ்மிட் பத்ரா, "மசோதாவை பற்றி மட்டும் பேசுங்கள்" என்று சொல்லவும் அவையிலும் சலசலப்பு எழுந்தது.. உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த டிகேஎஸ் இளங்கோவன் எழுந்து, "எங்கள் தலைவருக்கு நன்றி சொன்னோம்" என்று சொல்லவும் அனைவரும் அமைதியானார்கள்..

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

பிறகு மறுபடியும் ராஜேஷ்குமார் தொடர்ந்தார், "உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார், எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னரே முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பினார்" என்று சொல்லி முடிப்பதற்குள் அவையில் மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. .. உடனே டிகேஎஸ் இளங்கோவன், "எங்கள் தலைவருக்கு நாங்கள் நன்றியை சொல்லுகிறோம். உங்களுக்கு என்ன?" என்று அவையில் கேட்க, "மசோதாவை பற்றி மட்டும் பேசுங்கள்" என்று மறுபடியும் சொல்லி கடுப்பானார் மாநிலங்களவை துணைத் தலைவர் சஸ்மிட் பத்ரா.

உதயநிதி

உதயநிதி

ஆனால், முதல்வர் ஸ்டாலின் பற்றியும், உதயநிதி குறித்தும் ராஜேஷ்குமார் புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கவும், அதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருந்தனர்.. இறுதியில், சஸ்மித் பத்ரா, "இப்படியெல்லாம் பேசக்கூடாது.. ஏன் இதையே பேசுறீங்க? என்று கடிந்து கொண்டார்... அதற்கு பிறகும், பெண்களுக்கு சொத்துரிமையை விவசாயிகளுக்கு கடன் ரத்து என்று மக்களின் வாழ்வுக்கு உழைத்தவர் கலைஞர் உழைப்பு உழைப்பு என்று இருப்பவர் என்றால் தளபதி என்று ராஜேஷ்குமார் பேசவும், மீண்டும் குறுக்கிட்டார் சஸ்மித் பத்ரா.

 ப்ளீஸ்.. ப்ளீஸ்

ப்ளீஸ்.. ப்ளீஸ்

"ராஜேஷ்குமார் ஜி மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்க. உங்களுக்கு நேரம் அதற்கு மட்டும் இருக்கு. இதெல்லாம் பேசாதீங்க" என்று சொல்லவும், ராஜேஷ்குமார், "'ஐ ஒபே யுவர் ஆர்டர் சார்.. ப்ளீஸ் அல்லோ மீ'' என்று சொல்லி கொண்டே சப்ஜெக்ட்டுக்குள் ஒருவழியாக நுழைந்துள்ளாராம்.. இது எம்பியின் கன்னிப்பேச்சு என்றாலும், அதற்காக 2வது முறையும் இப்படி பேசுவதா? என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+