அரவக்குறிச்சி உள்பட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துங்கள்.. தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
டெல்லி: அரவக்குறிச்சி உள்பட 3 சட்டசபை இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்த முடியும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது என தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதாலேயே இதுபோல் ஒரு முடிவை தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் எடுத்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியது. எனவே 21 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மனு அளிக்கவுள்ளதாகவும் திமுக தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று மாநிலங்களவை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேர்தல் நடத்த வழக்குகள் தடையாக உள்ளன என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications