Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த காரணம் கொண்டும் *401# எண்ணை டயல் பண்ணாதீங்க.. அப்படி செய்தால் என்னாகும்.. மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உங்கள் செல்போனுக்கு யாராவது அழைத்து *401# எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினால், எந்த காரணம் கொண்டும் அதனை ஏற்காதீர்கள்.. அப்படி செய்தால் உங்கள் செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கல்லாபெட்டியில் இருந்த பணம், பீரோவில் இருந்த பணம் செல்போன் என்று சோப்பு டப்பாவிற்கு என்று வந்ததோ, அப்போது முதல் செல்போன் என்பது பணப்பபெட்டியாக மட்டுமல்ல.. உங்கள் வரலாறையும் ஒரு நிமிடத்தில் திருத்தும் விஷயமாகவும் மாறிவிட்டது. ஒருவரிடம் திருட அவரை அடிக்கவே தேவையில்லை.. அவரது செல்போனை ஹேக் செய்தால் போதும்.. சத்தமில்லாமல் அவரை ஒரே நிமிடத்தில் போண்டியாக்க முடியும்.. இதற்கு டிஜிட்டல் திருடர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.

Do not dial *401# from your cell phone: central government explain what if dail *401# in cell phone

ஒவ்வொரு வழியும், சிலர் ஏமாந்த பின்னரே தெரிய வருகிறது. ஏமாந்தவர்கள் அளிக்கும் புகாருக்கு பின்னரே என்ன நடந்தது என்று போலீசுக்கும் அரசுக்கும் தெரிகிறது. அந்த வகையில் புதிய மோசடி நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.

என்ன மோசடி: உங்களை தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதாக அழைப்பார்கள்.. அவர்கள் உடனடியாக உங்களின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சொல்வார்கள். இந்தப் பிரச்னையை சரி செய்ய '401'-ஐ அழுத்துமாறும் அத்துடன் அவா்கள் கூறும் செல்போன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுவார்கள்.

இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படும். உங்கள் எல்லா அழைப்பும் ஃபார்வர்டு ஆகிவிடும். இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள். ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து அதனை டயல் செய்து கூடுதலாக *401# என டயல் செய்யச் சொல்வதால், நமக்கு வரும் ஓடிபியும், மோசடியாளர்களின் கைப்பேசிக்கு சென்றுவிடும். இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கை மோசடி செய்துவிடுவார்கள். இதை கண்டுபிடித்த மத்திய அரசு, *401# எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தி உள்ளது.

மத்திய தகவல் தொடா்புத் துறை வெளியிட்ட அறிவிக்கையில், " இந்தியாவில் உள்ள தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு '401' எண்ணை டயல் செய்யுமாறு என்றுமே கூறியது இல்லை. அவ்வாறு யாராவது உங்களை டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு செல்போன் எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், செல்போன் அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்துவிடுங்கள்" என்று அறிவுறுத்தி உள்ளது.

செல்போனில் மொபைல் பேங்கிங் , கூகுள் பே, போன்பே, பாரத் பே, பேடிஎம் என எந்த வகையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்பவர்களாக இருந்தாலும், முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை கூடுதல் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். +91 அல்லாத எண்களில் இருந்து வாட்ஸ் ஆப் அல்லது போன் கால்கள் அல்லது எஸ்எம்எஸ்களை திறக்கவே வேண்டாம்.

அதேநேரம் பரிசு விழுந்துள்ளதாகவோ அல்லது வேலை, பணம், கடன் என எந்த வகையிலான விளம்பரங்கள், கவர்ச்சி அறிவிப்புகளை நம்ப வேண்டாம். மேலும் யார் போனில் அழைத்து ஒடிபி அல்லது உங்களை பற்றிய தகல்களை கேட்டால் கூற வேண்டாம். வங்கி கணக்கு பிளாக் ஆக போகிறது உள்பட முன்பின் தெரியாதவர்களின் எந்த மாதிரியான மிரட்டல்களையும் கண்டு கொள்ளாதீர்கள்..

எந்த காரணம் கொண்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்று பொய்யாக வரும் அழைப்புகளின் போது, அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக செய்துவிடாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சைபர் கிரைமை தொடர்பு கொள்ளுங்கள்.. மேலும் புகார் அளியுங்கள்; அதுவே இன்றைக்கு நிவாரணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+