அண்டார்டிகா கண்டம் தெரியும்.. அதற்கு நாடாளுமன்றம் உள்ளது தெரியுமா? கொச்சியில் அடுத்த வாரம் கூடுகிறது
டெல்லி: நம் அனைவருக்கும் அண்டார்டிகா என்ற ஒரு கண்டம் இருப்பது தெரியும்.. ஆனால் இந்த கண்டத்தின் நாடாளுமன்ற கூட்டம் இம்மாத இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அண்டார்டிக் நாடாளுமன்றம் என அழைக்கப்படும் 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் வரும் மே 20-30 வரையிலான நாட்களில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகிறது.

கோவாவில் அமைந்துள்ள பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், புவி அறிவியல் அமைச்சகம் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அண்டார்டிக் ஒப்பந்தத்தில் உள்ள 56 உறுப்பு நாடுகளும் பங்கேற்க உள்ளது.
கடைசியாகக் கடந்த 2007ஆம் ஆண்டு இந்தக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன் பிறகு சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டம் மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.
அண்டார்டிக் ஒப்பந்தம்: அண்டார்டிகா பகுதியில் ஆய்வு செய்வது குறித்து 1959ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.. முதலில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, தென்னாப்பிரிக்கா, சோவியத் ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 12 நாடுகள் இந்த அண்டார்டிக் ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஒப்பந்தம் 1961இல் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு பல்வேறு நாடுகளும் இதில் இணைந்துள்ள நிலையில், இப்போது இந்தியா உட்பட மொத்தம் 56 நாடுகள் இப்போது அதில் உள்ளன.
முக்கிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே பனிப்போர் நடந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வதேச புவிசார் அரசியலுக்கு அண்டார்டிகாவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தில் பல முக்கிய பாயிண்டுகள் இடம்பெற்றிருந்தன.
அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே அண்டார்டிகாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. ராணுவ மயமாக்கல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தக் கூடாது..
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைவருக்கும் அண்டார்டிகா பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளச் சுதந்திரம் இருக்கிறது. அங்கு அனைத்து நாடுகளும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.. அண்டார்டிகா குறித்த டேட்டாக்கள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும்.
அண்டார்டிகாவில் எந்தவொரு இடத்திலும் அணுவாயுத சோதனைகளை மேற்கொள்ளக்கூடாது. அங்குக் கதிரியக்க கழிவு பொருட்களைக் கொட்டுவதும் தடை செய்யப்படும் உள்ளிட்டவை இதன் முக்கிய பாயிண்டுகள் ஆகும்.
இந்தியா: 1983 முதல் அண்டார்டிக் ஒப்பந்தத்தின் முக்கிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அண்டார்டிகா தொடர்பான அனைத்து முக்கிய செயல்முறைகளிலும் இந்தியா வாக்களித்துள்ளது. அண்டார்டிக் ஒப்பந்தத்தில் உள்ள 56 நாடுகளில், 29 நாடுகள் ஆலோசனைகள் நாடுகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன.. அதில் இந்தியாவும் ஒன்றாகும்.
கடந்த 1981ஆம் ஆண்டு முதலே அண்டார்டிகாவில் இந்தியா ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அண்டார்டிகாவில் இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையமான தக்ஷின் கங்கோத்ரி 1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது தென் துருவத்தில் இருந்து 2,500 கிமீ தொலைவில் குயின் மவுட் லேண்டில் அமைக்கப்பட்டது. இந்த நிலையம் 1990 வரை செயல்பட்டது.
இந்திய ஆய்வு மையங்கள்: 1989ஆம் ஆண்டில் இந்தியா தனது இரண்டாவது ஆய்வு மையத்தை அண்டார்டிகாவில் திறந்தது. மைத்ரி என்ற இந்த ஆய்வு மையம் ஷிர்மேச்சர் ஒயாசிஸ் என்ற பகுதியில் அமைக்கப்பட்டது. தக்ஷின் கங்கோத்ரியில் இருந்து 90 கிமீ தொலைவில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வு மையம் இன்னும் செயல்பட்டு வருகிறது. இந்த மைத்ரி ஆய்வு மையத்தில் கோடைக் காலத்தில் 65 பேரும், குளிர்காலத்தில் 25 பேரும் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
2012 ஆம் ஆண்டில், இந்தியா தனது மூன்றாவது ஆராய்ச்சி நிலையமான பாரதியை அண்டார்டிகாவில் அமைத்தது. இது மைத்ரிக்கு கிழக்கே 3,000 கிமீ தொலைவில் ப்ரைட்ஸ் விரிகுடா கடற்கரையில் உள்ளது. இந்த நிலையம் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிலையில், இஸ்ரோவும் இதைப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த மையத்தில் கோடைக் காலத்தில் 72 பேரும், குளிர்காலத்தில் 47 பேரும் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
மைத்ரி 2: இதற்கிடையே மைத்ரி ஆய்வு மையத்தில் இருந்து சில கிமீ மைத்ரி II என்ற புதிய ஆய்வு மையத்தையும் திறக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது வரும் 2029 முதல் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. கொச்சியில் இம்மாதம் அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அப்போது மைத்ரி 2 கட்டுமானம் குறித்த தனது திட்டத்தையும் இந்தியா முன்மொழிய உள்ளது. இந்த கட்டுமானம் நடக்க அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது..
என்ன நடக்கும்: இந்த அண்டார்டிக் ஒப்பந்தம் அப்பகுதியில் நடக்கும் ஆய்வுகள் குறித்த சர்வதேச உரையாடல்களை எளிதாக்கும். கொச்சியில் நடக்கும் இந்த மாநாட்டின் போது, அண்டார்டிகாவில் அமைதியான ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தும் எனத் தெரிகிறது. உலகின் பிற இடங்களில் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்தாலும் அது அண்டார்டிகாவில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் கூறுகையில், "அண்டார்டிகாவில் சுற்றுலாவை ஒழுங்குபடுத்த புதிய குழுவை இந்தியா அறிமுகப்படுத்தும்.. 2016 முதலே அண்டார்டிகாவில் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது.. இப்போது அதற்கான தனிக் குழு அமைக்கப்படும். நெதர்லாந்து, நார்வே மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த குழுவில் இருக்கும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications