சரித்திரத்தில் இடம் பிடித்த 5 லோக்சபா சபாநாயகர்கள்.. யார் யார்? ஏன் தெரியுமா?
டெல்லி: நாட்டின் 18-வது லோக்சபா சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ந் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-வது லோக்சபாவின் சபாநாயகர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார்.

18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டம் ஜூன் 24-ந் தேதி தொடங்குகிறது. ஜூன் 24, 25 ஆகிய இரு நாட்கள் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். இதற்காக இடைக்கால சபாநாயகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமிப்பார்.
புதிய எம்பிக்கள் பதவியேற்புக்குப் பின்னர் ஜூன் 26-ந் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். லோக்சபா சபாநாயகர் பதவியைப் பெறுவதில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் மும்முரமாக உள்ளது. ஆனால் பாஜக, லோக்சபா சபாநாயகர் பதவியை அவ்வளவு எளிதாக விட்டுத் தராது என கூறப்படுகிறது.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி (என்டி ராமாராவ் மகள் - சந்திரபாபு நாயுடு மனைவியின் சகோதரி), முன்னாள் சபாநாயகர் ஜிஎம்சி பாலயோகியின் மகன் ஹரிஸ் மாதூர் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.
லோக்சபா சபாநாயகர்களில் 5 பேர் சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர்.
- கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் - சுதந்திர இந்தியாவின் முதலாவது லோக்சபாவின் சபாநாயகர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
- நீலம் சஞ்சீவ ரெட்டி- ஜனதா கட்சியச் சேர்ந்தவர். சுதந்திர இந்தியாவில் முதலாவது காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த சபாநாயகர். மொத்தம் 109 நாட்கள் சபாநாயகராகப் பதவி வகித்தார்
- பல்ராஜ் ஜாக்கர்- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மொத்தம் 9 ஆண்டுகள் 329 நாட்கள் சபாநாயகராக இருந்தவர். லோக்சபா சபாநாயகராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர். அதாவது 7 வது , 8-வது லோக்சபாவின் சபாநாயகராக பதவி வகித்தார்
- ஜிஎம்சி பாலயோ- தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். லோக்சபா சபாநாயகர் பதவியில் அமர்ந்த முதல் தலித். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 3 ஆண்டுகள் 342 நாட்கள் 12-வது லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார்
- சோம்நாத் சட்டர்ஜி- மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 14-வது லோக்சபாவின் சபாநாயகராக இருந்தார். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சபாநாயகராக பதவி வகித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications