1952-ல் ரூ10.45 கோடியில் நடத்தப்பட்ட முதல் லோக்சபா தேர்தல்-இப்போ எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தெரியுமா?
டெல்லி: நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தலுக்கு 1952-ம் ஆண்டு மொத்தம் ரூ10.45 கோடி செலவிடப்பட்டது. தற்போது அதனைவிட 80, 90 மடங்கு அதிகமாக லோக்சபா தேர்தலுக்காக செலவிடப்படுகிறது.
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய 2 கட்டங்களுக்கும் மே 25, ஜூன் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவை ஒட்டுமொத்த தேசமும் அல்ல.. உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கம் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த அணியான "இந்தியா" கூட்டணி புதிய ஆட்சியை அமைக்குமா? என்பதுதான் எதிர்பார்ப்பு.
பொதுவாக லோக்சபா தேர்தல்களுக்கான செலவுகளை மத்திய மாநில அரசுகள் 50:50 என்ற அளவில் பகிர்ந்து கொள்கின்றன. தேர்தல் செலவுகள் என்பது போக்குவரத்து, ஊழியர்களுக்கான ஊதியம், தேர்தலை நடத்துவதற்கான பொருட்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்டவைகளைக் கொண்டது.
நமது நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தல் 1951-52ல் நடைபெற்றது. 68 கட்டங்களாக நடைபெற்ற முதலாவது லோக்சபா தேர்தலுக்காக மொத்தம் ரூ10.45 கோடி செலவிடப்பட்டது. அத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 0.60 பைசாவை அரசு செலவிட்டது. நாட்டின் முதல் 6 லோக்சபா தேர்தல்களுக்கு ஒரு வாக்காளருக்கு ரூ1-க்கும் குறைவாகவே அரசு செலவு செய்தது. 7-வது முதல் 10- வது லோக்சபா தேர்தல் வரை ஒரு வாக்காளருக்கான அரசின் செலவு ரூ10க்கும் குறைவாகும். 11-வது முதல் 15-வது லோக்சபா தேர்தலில் ஒரு வாக்காளருக்கான அரசின் செலவு ரூ15.54 ஆக இருந்தது. 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ரூ17 ஆகவும் 2009-ல் இது ரூ12 ஆகவும் இருந்தது.
ஆனால் 2014-ம் ஆண்டு ஒரு வாக்காளருக்கான அரசின் செலவு ரூ46 ஆகவும் 2019-ல் ஒரு வாக்காளருக்கான செலவு ரூ 72 ஆகவும் அதிகரித்தது
1952-ம் ஆண்டு தேர்தலுக்காக ரூ10.45 கோடி செலவு செய்த மத்திய அரசு,
1957 தேர்தலுக்கு ரூ5.9 கோடியும் 1962 தேர்தலுக்கு ரூ7.32 கோடியும் செலவிட்டது.
1967-ல் ரூ10.8 கோடியாக இருந்த லோக்சபா தேர்தல் செலவினம் 1980களில் ரூ54 கோடியை தாண்டியது. 1980-களின் இறுதியில் 1989-ம் ஆண்டு தேர்தல் செலவு ரூ154.22 கோடியானது.

ஆனால் 1991 லோக்சபா தேர்தலுக்கு இரு மடங்கு கூடுதலாக செலவிட்டது மத்திய அரசு 1991 லோக்சபா தேர்தலுக்கு ரூ359.1 கோடி செலவிடப்பட்டது.
1996 லோக்சபா தேர்தலுக்கு ரூ597.34 கோடி, 1998 தேர்தலுக்கு ரூ666.22 கோடியும் 1999 லோக்சபா தேர்தலுக்கு ரூ947.68 கோடியும் செலவிடப்பட்டது.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு ரூ1113.88 கோடி செலவிட்ட மத்திய மாநில அரசுகள், 2009-ல் ரூ 846.67 கோடி மட்டும் செலவிட்டன,
ஆனால் 2014 லோக்சபா தேர்தலுக்கான செலவு ரூ3870 கோடியை எட்டியது. 2019-ல் இந்த செலவுத் தொகையானது ரூ6500 கோடியாக அதிகரித்தது. தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு தோராயமாக ரூ4,500 கோடி செலவிடப்படும் என கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications