10 ஆவது முறை.. 77ஆவது சுதந்திர தினம்.. பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையை கவனிச்சீங்களா?
டெல்லி: 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த தலைப்பாகை எந்த மாநிலத்தினுடையது தெரியுமா?
நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். தொடர்ந்து 10-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை 10ஆவது முறையாக தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றினார். அவரது பேச்சில் வழக்கம் போல் துடிப்பு இருந்தது. ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்தின் தலைப்பாகையை அணிந்து கொண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்.
இந்த முறை அவர் பல்வேறு நிறங்கள் கொண்ட பந்தானி பிரின்ட் செய்யப்பட்ட தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் மஞ்சள், பச்சை சிகப்பு ஆகிய நிறங்கள் இருந்தன. இது ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய தலைப்பாகையாகும். அவர் அரை வெள்ளை நிறத்தினாலான குர்தாவும் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அது முதல் வித்தியாசமான தலைப்பாகைகளை அணிந்து வருகிறார் கடந்த ஆண்டு 76 ஆவது சுதந்திர தினத்தின் போது மூவர்ணங்களை கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தார். வெள்ளை நிற பைஜாமா அணிந்து நீல நிற கோட் அணிந்திருந்தார். அது போல் 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது கோல்ஹாபுரி பேட்டா ஸ்டைல் தலைப்பாகையை அணிந்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு ஆரஞ்ச், மஞ்சள் நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் ஆரஞ்ச், வெள்ளை நிறத்தில் உருளை உருளையாக டிசைன் இருந்தது. மேலும் கொரோனா காலம் என்பதால் அவர் மாஸ்க் அணிந்திருந்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்திருந்தார். 2018இல் சிகப்பு மற்றும் காவி நிறத்தினாலான தலைப்பாகையை அணிந்திருந்தார்.
2017ஆம் ஆண்டு சிகப்பு, மஞ்சள் நிறத்தில் கட்டம் கட்டமாக போடப்பட்டிருந்த தலைப்பாகையை அணிந்திருந்தார். 2016 ஆம் ஆண்டு பிங்க் மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகையையும் 2015 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் மஞ்சள் நிற தலைப்பாகையையும் அணிந்திருந்தார். முதல் முறையாக அவர் 2014 இல் தேசியக் கொடியை ஏற்றிய போது சிகப்பு நிறத்தினாலான ஜோத்பூரி தலைப்பாகையை அணிந்திருந்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications